
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று மே 17 சனிக்கிழமை, ‘தேசிய கல்விக் கொள்கை-2020 என்னும் மதயானை’ என்னும்
நூலை வெளியிட்டார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய இந்நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்- நாடாளுமன்ற கல்வி நிலைக் குழு தலைவர் திக் விஜய சிங், தமிழ்நாட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்- நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வைகோ, தமிழ்நாட்டு மாநில காங்கிரஸ் தலைவர்- சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி வேல்முருகன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் முகைதீன், கொங்கு நாட்டு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி கோபாலக கௌடா, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேநாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, இந்து குழுமத்தின இயக்குனர்- பத்திரிகையாளர் என். ராம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வாரியத் தலைவர்கள், திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


