Monday, August 3, 2026

குயில் விழா 2026!

2026 குயில் விழா தொடர்பில் இன்று முதல் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டதாக ஜெய பக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் அதன் நிறுவனரு மான டத்தோ டாக்டர் கு. செல்வராஜு தெரிவித்துள்ளார்

“மாணவர்கள் காட்டும் அளவற்ற வரவேற்பினால், பதிவு செய்யும் நாள் ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”.

கட்டுரை எழுதுதல், புதிர்போட்டி, விடுகதைப் போட்டிகளுக்கான தேதிகள் நாளை புதன் கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மாணவர்களே, உங்கள் திறமையை வெளிப்படுத்தத் தயாராகுங்கள்!
வெற்றி உங்களுக்காகக் காத்திருக்கிறது!”

அகப்பக்க தொடர்பிலோ அல்லது போட்டி குறித்தோ ஏதேனும் சிக்கல் அல்லது ஐயம் ஏற்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்கள் மூலம் ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்புக் கொள்ளலாம். அனைத்து சிக்கலும் உடனுக்குடன் தீர்க்கப்படும்.

தொலைப்பேசி எண்கள் :
012-3161658 – ஜெயபக்தி அலுவலகம்;
010-2982510 – தாரணி;
011-31242739 – ஹேமலதா
தொலைவரி: https://t.me/JayaBaktiSupport

மேல் விவரத்திற்கு kuil.jayabakti.com என்னும் அகப்பக்கத்தையும் ஜெயபக்தியின் சமூக வலைத்தளங்களையும் நாடலாம்.

இப்போதே இணைந்திடுங்கள், இலக்கை வென்றிடுங்கள் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் டத்தோ செல்வராஜு மேலும் விவரித்துள்ளார். ✨

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை