
817 பேரின் பங்கேற்புடன் MBOR சாதனை! DeepZleep Challenge மூலம் தரமான தூக்கத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு
AmLife International நிறுவனம், DeepZleep Challenge நிகழ்ச்சியின் மூலம் 817 பேர் 20 நிமிட DeepZleep அனுபவ அமர்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் Malaysia Book of Records (MBOR)-இல் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்நிகழ்வு 1 Utama வணிக வளாகத்தின் Ground Floor, Centre Court பகுதியில் நடைபெற்றது.
இந்தச் சாதனை “MOST PARTICIPANTS IN A SLEEP WELLNESS RECOVERY TECHNOLOGY EXPERIENCE SESSION” என்ற அதிகாரப்பூர்வ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் தூக்கத்தின் மூலம் உடல் மற்றும் மன மீட்சியின் முக்கியத்துவத்தை நேரடியாக அனுபவித்து அறிந்துகொள்ளும் வகையில் DeepZleep Challenge ஏற்பாடு செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

AmLife International நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி Lew Mun Yee, இந்த முயற்சி வெறும் சாதனைப் பதிவு செய்வதற்காக அல்ல என்றும், தூக்கத்தை ஓய்வுக்கான நேரமாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மற்றும் சமநிலையான வாழ்க்கைக்கு இன்றியமையாத மீட்பு செயல்முறையாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
நிறுவனத்தின் வணிக மேம்பாட்டு துணைத் தலைவர் Edward Yong, இன்றைய வேகமான வாழ்க்கை முறையால் பலருக்கு தரமான தூக்கம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், இது ஆற்றல், கவனச்செலுத்தல், உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்
இதனை கருத்தில் கொண்டு, மின்சாரத் தூண்டுதல் தொழில்நுட்பம், வெப்பச் சௌகரியம் மற்றும் ஒலி அதிர்வெண் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் DeepZleep அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
AmLife நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் Arthur Ang, 500 பேருக்கும் அதிகமானோர் ஒரே நாளில் இந்த அனுபவத்தைப் பெறும் வகையில் DeepZleep Challenge திட்டமிடப்பட்டதாகக் கூறினார்.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் 20 நிமிட அனுபவ அமர்வை முடித்த பின்னர் ஆரம்பநிலை உடல்நலம் மற்றும் தூக்கத் தரம் தொடர்பான மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டது.

20 நிமிட DeepZleep அனுபவம் இரவு நேர முழுமையான தூக்கத்திற்குப் பதிலாக அமையாது என்றும், ஓய்விற்கான சரியான சூழல் மற்றும் நேரத்தை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இதன் நோக்கம் என்றும் AmLife விளக்கியது.
இந்த நிகழ்வில் 817 பேர் பங்கேற்று ஆரம்ப இலக்கான 500 பேரைத் தாண்டினர்.
மேலும், Dr Say Shazril, Eyra Hazali மற்றும் Fahrin Ahmad ஆகிய பிரபலங்களும் பங்கேற்று, தரமான ஓய்வு மற்றும் தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்.
எதிர்காலத்திலும் கல்வி, பொதுமக்கள் அனுபவ நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தூக்க நலன் குறித்த விழிப்புணர்வை விரிவுபடுத்த AmLife உறுதியளித்துள்ளது.
செய்தி: முத்தமிழ் மன்னன்


