
ரவாங் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் பள்ளிக்கான கூடுதல் கட்டடத்தை கட்டும் முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் நடவடிக்கை எடுத்த கல்வித் துறை இயக்குனர் அஸாமிற்கும் முன்னதாக போராட்டத்தில் குதித்த ரவாங்வாழ் பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சமூக ஆர்வலரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான டத்தோ சுரேஷ் ராவ் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ரவாங்வாழ் பொதுமக்களும் பெற்றோரும் ஒன்று திரண்டு பள்ளித் திடலில் இணைக்கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பாக பேரளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரவாங் தமிழ்ப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது உண்மைதான். புதிய கட்டடம் எழுப்ப வேண்டியிருந்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கின்ற பலகைகா கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடம் எழுப்பலாம்.
அதை விடுத்து பள்ளி விளையாட்டுத் திடலை ஆக்கிரமித்தால் மாணவர்களின் உடல் நலமும் புறப்பட நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்.
எனவே, பள்ளித் திடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்ற பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதியக் கட்டடத்தை எழுப்பும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ரவாங் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், ரவாங் அருள்மிகு மாரியம்மன் ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ பாலகிருஷ்ணன் போன்ற ஆன்மீக தலைவர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு பள்ளி திடலில் கட்டடம் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேவேளை, மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய கட்டிடமும் வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
அடுத்த நாளே, ஆகஸ்ட் மூன்றாம் நாள் திங்கட்கிழமை கல்வித்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அஸாம் வருகை தந்து, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்ததாக சமூக ஆர்வலருமான டத்தோ சுரேஷ் ராவ் தெரிவித்தார்.

சந்திப்பிற்குப் பின் பள்ளி தொடரில் கட்டடம் எடுக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் படுதாகவும் இதன் தொடர்பில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் நாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்ததாக இதன் தொடர்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சமூக ஆர்வலருமான டத்தோ சுரேஷ் ராவ் இன்று தலைநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறினார்.


