Monday, May 25, 2026

மக்கள் நீதிக் கட்சி துணைத் தலைவர் போட்டியில் களம் காண்பது சொந்த முடிவு: நூருல் இஸா

நூருல் இஸா, சந்தியாகு, பிரபாகரன், ‘வணக்கம் மலேசிய’ ஊடகத் தலைவர் தியாகராஜன், முத்தமிழ் மன்னன், தேசம் ஊடகத் தலைவர் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 18-
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் மக்கள் நீதிக்கட்சி- கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் ரஃபிஸி ரம்லியை எதிர்த்து நூருல் இஸா போட்டியிடுகிறார்.

இந்நிலையில்
கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என் சொந்த முடிவு என்று நூருல் இஸா அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கருத்தை மறுத்து நான் பலமுறை பேசியுள்ளேன்.

மேலும், நான் கெஅடிலான் கட்சிக்கு புதியவர் அல்லர். ரெஃபோமாசி காலத்தில் இருந்தே கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன்.

அதைப்போல, அரசியலில் நான் பல சோதனை மற்றும் சவால்களை சந்தித்து இருக்கிறேன். கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை இருக்கிறேன்.

செய்தியாளர் சந்திப்பின்போது நூருல் இஸா அருகில் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சே வே முத்தமிழ் மன்னன்

கடந்த காலத்தில் நான் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு எதிர்ப்பு இருந்தது என்று, இன்று நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பங்சாரில் இன்று காலையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பத்து நாடாளுமன்றத் தொகுதி கெஅடியிலான உறுப்பினர் ப. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர்செ.வே. முத்தமிழ் மன்னன் இந்த செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை