சட்டக் கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் தொகுத்த நூலை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீடு செய்தார்.

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் அதன் தலைவரும் சட்டக் கதிர் இதழின் ஆசிரியருமான டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் தயாரித்த உலகெங்கும் கலைஞர் என்னும் நூலை தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், சென்னை
அண்ணா அறிவாலயத்தில் வெளியிடு செய்த பொழுது, அதை தமிழ்நாட்டு திராவிடர்க் கழகத் தலைவர் ஆசிரியர் கீ வீரமணி பெற்றுக்கொண்டார்.
திமுக பொதுச்செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி கே எஸ் இளங்கோவன், நூலாசிரியர் சம்பத், திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் ஆர் விடுதலை மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

சென்னையிலும் உலகின் பல பகுதிகளிலும் தமிழர் பொருளாதார மாநாட்டை நடத்தி வருபவர் சம்பத்.
கடந்த ஆண்டுகூட நவம்பர்த் திங்கள் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் பதினோராவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை சிறப்பாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


