Thursday, April 16, 2026

காஸா மக்களின் பசிதீர்க்க விரைகிறார் மனிதநேய மாண்பாளி கிரெட்டா துன்பெர்க்

உலக அரசியலை மதவாதம் பற்றிக் கொண்டுள்ளது; இந்த மதவாத அரசியல் பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கி வேகவேகமாக பின்னேறுகிறது.

இந்த மதவாத அரசியலின் கோரமுகம் தற்பொழுது அம்பலப்பட்டு நிற்பது காஸாவில்; மதவாத அரசியல் காஸா மக்களின் உடற்பிணியையும் பசிப் பிணியையும் போர்முனை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது

காசா மண்டலத்தில் குடல் சுருங்கி உடல் வதங்கி வாடிய உள்ளத்துடன் அல்லல் படும் மக்களுக்காக ஒரு மாதரசி, சமூகத் தொண்டாளர், மனித உரிமைப் போராளி கிரெட்டா துன்பெர்க் உணவுக் கப்பலு-டன் காஸா மண்டலத்தை நோக்கி இந்த பொழுதில் தன் குழுவினருடன் விரைந்து கொண்டிருக்கிறார்.

பஞ்சம் பட்டினியால் மனித அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காஸா முனையை நோக்கி உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுக் நடைபெறுவது உண்மைதான்; ஆனால், இமைப்பொழுதுதோறும் அல்லல்படும் காஸா மக்களின் துயருக்கான விரை-வான தீர்வுபற்றிதான் எந்தச் செயலை-யும் காணோம் என்று உள்ளம் குமுறு-கிறார் கிரெட்டா துன்பெர்க்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வல-ரான கிரெட்டா துன்பெர்க் மற்றும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு படகு காஸாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பால், பழச்சாறு, ரொட்டி, டின்னில் அடைக்கப்பட்ட உணவு, ‘புரோட்டின் பார்’ என்னும் புரதபாலம் போன்ற உணவுப் பொருள்களை எல்லாம் அந்தப் படகில் வைத்து அவர்கள் எடுத்துச் செல்கின்ற-னர்; இந்தப் பயணம் கடந்த ஞாயிறன்று சிசிலியில் தொடங்கியது.

பயணம் தொடங்கி இரண்டு நாள் கழித்து பேசிய கிரெட்டா, இஸ்ரேலின் சாத்தியமான எதிர்ப்பையும் தாக்கு-தலையும் யோசித்துப் பின்னர்தான் இந்த முடிவை துணிந்து எடுத்துள்ள-தாகவும் பலஸ்தீனர்களுக்கு மனிதநேய உதவி கிடைக்காமல் தொடர்ந்து தடுத்துவரும் இஸ்ரேலிய படையின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக அந்த மனிதநேய மண்பாளினி தெரிவித்துள்ளார்

“இந்த மனிதநேய உதவிப் பயணத்தின் பொழுது கடலில் எதுவும் நிகழலாம் என்பதை அவதானித்த பின்னர்தான் இந்தப் பயணத்தைத் துணிந்து மேற்கொண்டுள்ளோம்”.

எத்தகைய இடையூறு நேர்ந்தாலும் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப் பட்டாலும் காசா மண்ணில் பட்டினியால் வாடும் குழந்தைகளின் பசி தீர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்ட நாங்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளால் அல்லது அதன் கூட்டாளிகளால் ஏற்படும் எதனையும் எதிர்கொள்ள தயாரிக்க விட்டோம் என கிரேட்டா துன்பெர்க அதிரடி காட்டுகிறார்.

எதையும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ஆபத்தான இந்த பயணம் மகத்தானது என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம். இந்தக் கடல் பயணத்தில் மனித நேய செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்குடன் 11 மக்கள் நல செயற்பாட்டாளர்கள் இணைந்துள்ளனர்.

“இந்த முயற்சி, எங்களைப் பற்றியது அல்ல; நாங்கள் மேற்கொள்ளும் பயணத்தை பற்றியதும் அல்ல; அப்படி என்றால் இதை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்பதை இஸ்ரேலிய படையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்”.

போர் தொடுப்பதும் தொடர்வதும் அந்தந்த நாடுகளைப் பொறுத்தது. ஆனால் இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்காக பிறந்த அப்பாவி மக்கள் ஏன் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும்?;

“இதை தடுப்பதில் உலக அரசுகள் தோல்வி அடைந்து விட்டதால் நாங்கள் இதை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது”.

கடந்த மாதம் இதே முயற்சியில் ஈடுபட்ட ஒரு கப்பல் வீழ்த்தப்பட்டது; இருந்தாலும் நாங்கள் இந்த மாதத்தில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று உள்ளத்தில் உறுதியும் கண்களில் ஒளியுமாக தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார் கிரெட்டா துன்பெர்க்.

எது சரி என்று படுகிறதோ, அதைச் செய்கிறோம்; மனித குல உரிமைக்கும் நீதிக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பதுதான் எங்கள் பணி;

மக்கள் தேவையில்லாமல் எதிர்-கொள்ளும் துன்பத்திற்கான அனைத்து காரணங்களுக்கும் எதிராக நாங்கள் குரல் எழுப்புவோம்; வெடிகுண்டையும் சுற்றுச்சூழல் சீரழிவையும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் இராணுவ அக்கிரமத்திற்கு எதிராக துணிந்து நிற்போம்

ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு துணை நிற்காமல் நீதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் குரல் கொடுக்-கிறோம் என்பதில் துளியும் நியாயம் இல்லை; அத்தகையோர் போலியா-னோர்.

காலநிலை மாற்றத்தால் வெள்ளை இன குழந்தைகள் அதிக பாதிப்புக்கு ஆளா-கின்றனர் என்பதற்காக குரல் கொடுப்ப-வர்கள் பாலஸ்தீனத்தில் பட்டினியால் மடியும் குழந்தைகளை பற்றி கவலைப் படாமல் இருப்பது என்ன நியாயம்?

ஒரு வகையில் இதுவும் ஒரு வகை இன வெறியே; அரசு அடக்கு முறையும் ஒரு வன்முறைதான்.

எனவே பாலஸ்தீன குழந்தைகளின் காய்ந்து போன வயிற்றை ஈரமாக்குவதற்காக தங்கள் மேற்கொள்ளும் இந்த பயணம் வெற்றியடைய கடைசிவரை போராடுவோம் என்று இந்த வீரமங்கை, மனித நேய போராளி சொல்கிறார். உலகில் ஏதோ ஒரு மூலையில் யரோ ஒரு தாய் ஈன்ற இந்த நல்லாளின் நன்முயற்சி வெற்றிபெற குமரி வாழ்த்துகிறாள்!

தகவல்:
பிபிசி-தமிழோசை.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை