
ஜனநாயக செயல் கட்சி-ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசு, எல்லை மீறுகிறது; ஜனநாயகப் படுகொலை செய்கிறது; நாட்டின் சமூக ஒருமைப்பாட்டை சீர்குலைக்கிறது. வீட்டுடைமை தள்ளுபடிக் கொள்கையில் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை அறிவித்துள்ள ஜசெக தலைமையிலான பினாங்கு மாநில அரசு, இந்துக்கள்-கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட மலேசிய இந்தியர்களை ஒதுக்கி இருப்பது ஒன்றாக வாழும் மக்களிடையே பாரபட்சம் காட்டி, பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்ல; ஒரு மாநில அரசாங்கமே சமூகத்தைக் கூறுபோடுகின்ற பச்சையான வஞ்சக முன்னெடுப்பு என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவொரு இனவெறிக் கொள்கை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மத-இனப் பிரிவினையை உள்ளடக்கிய இந்தப் புது நயவஞ்சக வடிவம் காலனித்துவ சக்திகளால் கட்டமைக்கப்படவில்லை. மாறாக, அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதிக்க ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தவறான கொள்கை அல்ல; திட்டமிட்ட துரோகம். மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி, மலேசிய இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி, சிதைத்து, பிரித்தாள்வதற்கான பிளவுவாதக் கொள்கை; இதுதான் மலேசியாவிற்-கான ஜசெக-வின் தொலைநோக்குப் பார்வையா? சமத்துவம் நிபந்தனைக்கு உட்பட்ட ஒரு தேசத்தில், தற்கால அரசியல் லாபத்திற்காக நாட்டின் ஒற்றுமை பலி கொடுக்கப்படுகிறதா?
இது அனைவருக்குமான உள்ளடக்கம் அல்ல; மாறாக, நன்கு திட்டமிடப்பட்ட பிரிவினைவாதம். ‘மதானி’ என்னும் தவறான பதாகையின்கீழ், பிரிவினை-யை விதைத்து, ஒற்றுமையை குலைத்து, இன மற்றும் மத வேறுபாட்டை இயல்-பான ஒன்றாக காட்சிப்படுத்தும் ஓர் இழிவான உத்தி ஆகும்.
அனைவரையும் உள்ளடக்கிய சொத்து-டைமைக் கொள்கையின் ஒரு கூறாக மதானி வீட்டுடைமைக் குறித்து பிரச்சா-ரம் செய்துகொண்டே, இப்படி மத அடிப்-படையில் ஒரு சாராருக்கு சலுகை அளிப்பது, கேலிக்கும் நகைப்புக்கும் உரியது. பாகுபாட்டை உள்ளடக்க-மாக்கும் தந்திரமாகும்.
ஜசெக போராட்டத்திற்கும் அரசியல் வாழ்வுக்கும் ஆண்டாண்டு காலமாக துணைநின்ற இந்திய சமுதாயத்திற்கு ஜசெக அளிக்கும் வெகுமதியா இந்த பச்சையான துரோகம்?
வழுக்குப்பாறை போன்ற மதவெறியும் இன-மத சர்வாதிகாரமும் கொண்ட இந்த ஆபத்தான முன்மாதிரி எதற்காக என்பதை நாம் அம்பலப்படுத்த வேண்-டும். சிவில் சமூகம், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை ஆரவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கி-ணைந்து இதை ஜனநாயக வழியில் எதிர்க்க வேண்டும்.
இந்த சமூக அநீதிக் கொள்கைக்காக ஜசெக-வும் அதன் கூட்டாளிகளும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். மலேசியா இத்தகைய இழிவான பாதையில் பயணிக்க முடியாது. நாம் நம் ஜனநாயக அடித்தளத்தை மீட்டெடுக்க வேண்டும்; ஒவ்வொரு மலேசியரின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.


