Thursday, April 16, 2026

அமித்ஷா தொடர் வருகை: அதிமுகவை மடக்குவதற்காக அல்ல! திமுகவை முடக்குவதற்காக!!எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை..!

நீரோரம் வருகின்ற அத்தனை உயிர்-களையும் உள்ளிழுத்து விழுங்குகின்ற இரட்டை நாக்கு முதலையைப் போல, அரசியல் களத்திற்கு வருகின்ற எல்லா கட்சிகளையும் விழுங்கி வருகின்ற வஞ்சக அமித்ஷா, அந்த தகிடுதத்த ஜனநாயக விரோத வித்தையை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்-காகவே வந்து வந்து போகிறார்.

அதற்கு ஏதுவாக அதிமுகவை இலக்கு வைத்து கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக பாஜக, காய் நகர்த்தி வருகிறது.

பாஜகவின் எண்ணத்திற்கு ஏற்ப அதிமுகவும் சிதைந்து விட்டது; அப்படிச் சிதைந்த அதிமுகவின் வலிமை பாஜக-விற்கு துணை புரியவில்லை; ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த-தோ ஏறக்குறைய அதே நிலையில்தான் இன்றளவிலும் இருக்கிறது தமிழ்நாட்டு பாஜக.

திரைப்பட நடிகர்களை கொண்டாடு-கின்ற தமிழர்களை வசப்படுத்தி விடலாம் என்று எண்ணியெண்ணி, காங்கிரஸ் எப்படி ஏமாந்ததோ அதைப்போல பாஜகவும் ஏமாந்து நிற்கிறது.

தமிழ்நாட்டு மக்கள் என்னவோ திரை நட்சத்திரங்களின் பின் அணிதிரளுகிற ரசிகர்கள்தான் என்றாலும் ஆயிரக்-கணக்கான ஆண்டுகளாக ஆண்ட பரம்-பரையினர் என்பதனால் அரசியல் விவேகமும் இருக்கிறது.

அதனால் தேர்தல் மூலம் வெற்றி பெறுவதோ கூட்டணி வலிமையினால் ஆட்சியைப் பிடிப்பதோ இயலாத காரி-யம் என்று தெரிந்து கொண்ட பாஜக தற்பொழுது ஜனநாயக அழிப்பு வேலை-யையும் சதி வேலையையும் ஒருசேர மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

அமித் ஷாவின் ஒரேக் கூட்டாளி, தேர்தல் ஆணையம்தான்

தேர்தல் ஆணையத்தின் துணை கொண்டு வாக்காளர் பட்டியல், வாக்குப் பதிவு இயந்திரம் ஆகிய இரண்டையும் இலக்குவைத்து காய் நகரத்தத் தொடங்கி விட்டார் அமித்ஷா.

நியாயமான தேர்தல் மூலம் திமுகவையோ அதன் தலைவரும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி-னையோ அசைக்க முடியாது என்பத-னால் குறுக்கு வழியில் வஞ்சக வலைபின்னத் தயாராகிவிட்டார் அமித்ஷா.

இதற்கு இடையில் ஏதாவது கலவரம் செய்யலாமா அல்லது குறைந்தபட்சம் மதப்பிணக்கையாவது ஏற்படுத்தலாமா என்னும் திருட்டு புத்தியுடன் ஆரிய அடிதாங்கி கூட்டம் தமிழ்நாட்டில் வலம் வருவதை திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.

திமுக மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மிக நுட்பமான காலகட்டம் இது.

ஆலந்தூர் பாரதி

திமுக கூட்டணியில் இணைந்திருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள், ஆர் எஸ் பாரதி போன்ற திமுக புள்ளிகள், மதிவதனி போன்ற திராவிடர் கழக பேச்சாளர்கள் உள்ளிட்-டோர் அமித் ஷாவுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியலை வாரந்-தோறும் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது இப்போழுது!.

இவர்களைவிட இன்றைய முரசொலி-யின் சிறப்பு செய்திகூட, அமித்ஷாவிற்கு எதை எதையோ சொல்கிறது.

அமித்ஷாவும் அவர்தம் அரசியல் கயமைக் கூட்டமும் இதையெல்லாம் கேட்டு என்னவோ திருந்துவதைப் போலவும் அவர்கள் மேற்கொண்டுள்ள குள்ளநரித்தனத்திலிருந்து பின்வாங்கி விடுவார்கள் என்பதைப் போலவும் முரசொலி மனப்பால் குடித்தால் இறுதியில் ஏமாற இருப்பது முரசொலி மட்டுமல்ல; திமுகவும்தான்.

மதிவதனி

ஜனநாயக முறைப்படி நடந்து கொள்கிறவர்களுக்கு எதையும் சொல்லலாம் எழுதலாம். ஜனநாயக பண்பு நலனை அடியோடு தொலைத்த இந்த காடையர்களுக்கு எதைச் சொல்லி, எதை எழுதி என்ன பயன் விலையப் போகிறது?

பண்ணையாரை விட அடியாள்தான் அதிகமாக துள்ளி குதிப்பான்.

பரிகாரத்தினால் இறைவனை வசப்படுத்த முடியாது; மதம் என்பது சிறுபிள்ளை விளையாட்டு அதனால் சோதியை வழிபடுங்கள் நலிந்தோர்க்கு அரவணைப்பு காட்டுங்கள் வாடும் புல்லுக்கும் மனம் இறங்குங்கள் என்று சொன்ன வள்ளலார எதிர்த்து அவரை நீதி மன்றத்துக்கு இழுத்தது ஓர் ஆரிய அடிதாங்கி தான்; ஆறுமுக நாவலர் என்னும் சாதிப்பித்தர்தான். நூற்றவ-தானி செய்குத்தம்பி பாவலருக்கு இருந்த விவேகமும் சமயப் பாங்கும் ஆறுமுக நாவலரிடம் இல்லை.

கடைசியில் அந்த வள்ளலாரை இல்லாமல் செய்தது ஆரியன் இல்லை ஆரியன் சொல்லுக்கு ஆடிய அடிதாங்கி அடியாள் கூட்டம்தான்.

தங்களின் பிழைப்பிற்கும் இருப்பிற்கும் ஏதும் தடையாக இருந்தால், எவரும் குறுக்கே வந்தால் பிராமணர்கள் அவர்-களை அழிக்காமல் விட மாட்டார்கள்.

இந்து ராஷ்டிரத்தை ஏற்றுக் கொள்ளாத காந்திக்கு இந்த ஆர் எஸ் எஸ் காரர்கள் என்ன பரிசு கொடுத்தார்கள்?

காந்தியை கொன்ற நாதுராம் விநாயக கோட்சே என்னும் சித்பவன பார்ப்பனன், தன் கையில் இஸ்லாம் என்று பச்சைக் குத்தி இருந்ததையும் நாம் எல்லோரும் அறிவோம்.

திருநெல்வேலி அக்ரகார வீதியை தீட்டாக்கி விட்டான் இந்த மிலேச்சன் என்றுகூறி திருநெல்வேலி ஆட்சியாளர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற சுப்பை-யன், கடைசியில் இந்திய விடுதலைப் போராளியாக மாற்றப்பட்டான்.

அந்தக் கொலைகாரனுக்கு வாஞ்சி நாதன் என்று தமிழியப் பட்டம் வேறு.

பிராமணர்கள் தொடங்கிய ஆர்எஸ்எஸ், நூற்றாண்டை எட்டிவிட்ட நிலையில் ஏறக்குறைய இந்தியாவில் இந்து ராஜியம் நிறுவப்பட்டு விட்டது

அதற்குத் தடையாக இருக்கிற ஒரே ஓர் இடம் பெரியாரின் தேசம்; திராவிட பூமி; அதை தற்காத்துக் கொண்டிருக்கின்ற போராளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்.

இதை மாற்ற வேண்டுமென்றால்,
தமிழ் நாட்டில் 2026-இல் அமைய இருக்கின்ற புதிய சட்டப்பேரவையில், திமுகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதில் பாஜக கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

எப்பாடுபட்டாவது 115 அல்லது 116 இடங்களுக்குள் திமுகவை முடக்கி விட்டால் ஆட்சி அமைக்காமல் தடுத்து விட்டு அதன் பிறகு குறுக்குசால் ஓட்டி குதர்க்கம் ஏற்படுத்தலாம் அல்லது சட்டமன்றத்தை முடக்கி வைக்கலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஆர் என் ரவியை ஏவி விட்டு தமிழ்நாட்டில் ஆரிய ஆட்சி நடத்தி விட்டு அடுத்த ஆறு மாதங்களில் எதையாவது குதர்க்கம் செய்து பேரம் பேசலாம் என்றெல்லாம் இலக்கு வைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே விலைபோக கூடியவர்கள் யார் யார் என்றேல்லாம் இப்பொழுதே அடையாளம் காணப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் பதிவேடு ஆகிய மூன்றின் மூலம் ஏதாவது தில்லுமுல்லு செய்து 20 தொகுதிகளில் பாஜக வென்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது பாஜக.

அதன் பிறகு என்ன வழக்கு தொடுத்தா-லும் அதற்கான முடிவு வருவதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலும் வந்து விடும்; அதற்குத் தோதாக தேர்தல் ஆணையம் என்ற அடிமை ஆணை-யத்தை வைத்து எதை வேண்டுமானா-லும் செய்து கொள்ளலாம் என்று இந்த ஜனநாயக விரோத, பச்சைக் கயவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.

தமிழக மக்களின் வாக்கு பெற்று தமிழ்நாட்டில் எதையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பாஜகவினர் அடுத்த சட்டமன்றத்தை தொங்கு சட்ட மன்றமாக உருவாக்குவது; 234 உறுப்பி-னர்களைக் கொண்ட தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் திமுகவிற்கு அடித்து பிடித்து பெரும்பான்மைக்கு ஒரு தொகுதியாவது குறைவாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது என்ற இரட்டை இலக்கில் காய் நகர்த்துகின்றார் அமித் ஷா.

மணி

பத்திரிகையாளர் என்ற போர்வையில் செயல்படும் ஆரிய ஆதரவாளர் மணி, அடுத்த சட்டமன்றம் தொங்கு சட்ட மன்றம்; தமிழ்நாட்டில் அடுத்து அமைய இருப்பது தொங்கு சட்டமன்றம்தான் என்றேல்லாம் அண்மைக் காலமாக அடிக்கடி கூறி வருகிறார்.

இதையும் அமித்ஷா வருகையையும் திமுக பொருத்திப் பார்க்க வேண்டும்

பெரிய நியாயவானைப் போல பேசி வரும் மணி, வாயைத் திறந்தாலே திமுக வெறுப்பு பீரிட்டு அடிக்கிறது!

மாநில அரசியல், தேசிய அரசியல், பன்னாட்டு அரசியல் உள்ளிட்ட எந்த கருத்தை எந்த வேளையில் பேசினாலும் அப்படியே போகிற போக்கில் திமுகவை வசைபாடவும் திமுகமீது சேற்றை வாரி இறைக்கவும் மணி தயங்குவதே இல்லை.

எவரும் சொல்லாத கருத்தை இவர் மட்டும் அடிக்கடி சொல்லி வருகிறார்.. . அடுத்த சட்டமன்றம் தொங்கு சட்டமன்றம் என்றும் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் மார்ஷலிடமும் அன்பழகனிடமும் அடிக்கடி சொல்லி வருகிறார் மணி!.

யாரோ சொல்லிக் கொடுத்ததை அல்-லது எந்த தரப்பினரின் நலத்தையோ விரும்பி அவர் இப்படி சொல்லி வரு-வதை, திமுக இனியாவது புரிந்து கொண்டு பேச்சை குறைத்துக் கொண்டு நுட்பமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் இன்றைய அவைத் தலைவர் அப்பாவு கடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதி என்று நினைக்கிறேன், அதில் வெற்றி பெற்றும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப் பட்டும் கடைசிவரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலேயே ஐந்தாண்டு கால தவணையும் முடிந்துவிட்டது.

அவரின் வெற்றியை தேர்தல் ஆணை-யமும் டெல்லி நீதிமன்றமும் எப்படி தட்டிப் பறித்தன என்பதை கருத்தில் கொள்வது இந்த இடத்தில் பொருத்த-மாக இருக்கும்.

இதேபோன்று 20 தொகுதிகளில் செய்தால் மு க ஸ்டாலினை அடுத்த முறை முதல்வர் பதவி ஏற்க முடியாமல் செய்துவிட முடியும் என்பதில் டெல்லி பாஜக தலைமை குறிப்பாக நாக்பூர் ஆர் எஸ் எஸ் தலைமை மிகவும் கவனமாக-வும் கருத்தாகவும் இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ்-தான் ஆட்சி அமைக்க போகிறது என்பது எல்லோர் கண் முன்னும் தெளிவாகத் தெரிந்தது.

இதைப்போலவே மௌனத்தை கடைப்பிடித்து புதுடில்லிலும் மராத்தி-யத்திலும் பாஜக அடித்து ஆடி இருக்கிறது.

எனவே பாஜகவின் மௌன காய் நகர்த்துதலை அவதானிக்காமல் போனால் 2026 இல் திமுக நிச்சயம் ஏமாறும்

நீதிமன்றங்கள் தீர்ப்பை வெளியிடாமல் மறைத்து வைப்பது என்னும் நீதித்துறை சார் சண்டித்தனம் அண்மைக்காலமாக இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடு-களில் இடம்பெற்று வருகிறது.

மொத்தத்தில், தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது இருபது தொகுதி-களில் பாஜக வெற்றி பெறுவது அல்லது இருபது தொகுதிகளில் தேர்தல் நடை-பெறாமல் தடுப்பது அல்லது ஏதாவது ஒரு வகையில் வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்படுத்து தேர்தலை ஒத்தி வைப்பது; வாக்குப்பதிவு நேரத்தில் கலவரம் ஏற்படுத்தி வாக்குப்பதிவைத் தடுப்பது, வாக்குப்பதிவு எந்திரத்தை சூறையாடுவது இப்படி எதையாவது செய்து 20 முதல் 25 தொகுதிகளில் தேர்தலை முடக்குவது என்ற குயுக்தி-யான திட்டங்களைத் தீட்டிக் கொண்டு அதற்கு பொருத்தமான அதிகாரிகளுக்கு ஊக்கமளித்து ஏவிவிடவும் தென்ன-கத்தை மையம் கொண்டுள்ளார் அமித் ஷா.

கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் வெட்டி ஒட்டி அல்லது திமுக அணிக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயரை நீக்கி, தங்களுக்கு ஆதரவான வாக்-காளர்களின் பெயரைச் சேர்த்து குளறுபடி செய்வது என்னும் கமுக்கத் திட்டங்களை பொதியவைத்து அமித் ஷா என்னும் கசட்டு அரசியல்வாதி தமிழ் நாட்டிற்கு திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது பாஜகவிற்கு நோக்கம் அல்ல! அது முடியவே முடியாது;

கிழக்கே உதிக்கும் சூரியன் இடம் மாறி மேற்கில் உதித்தாலும் உலகம் தலைகீழாக புரண்டாலும் அது நடக்காது என்பதை அந்த கயவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்: அதனால், ஏதாவது புரட்டுத்தனம் செய்து, அடுத்த சட்டமன்றத்தில் திமுகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு நூலிழை அளவிலாவது குளறுபடி செய்து குழப்பம் விளைவித்து திமுக ஆட்சியை முடக்குவதுதான் பாரதிய ஜனதாவின் இன்றையத் திட்டம்.

எனவே திமுகவும் திமுக தலைமை-யிலான கூட்டணி கட்சிகளும் வாக்காளர் பட்டியலை அடிக்கடி சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; 234 தொகுதிகளிலும் இந்த வாக்காளர் பட்டியலை இமைப்பொழுது தோறும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் அதைப்போல தேர்தல் காலத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை-யும் சரிபார்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

அமித்ஷா வருகையை திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் இனியும் அலட்சி-யம் செய்யாமல் “அமித் ஷாவால் ஒன்றும் செய்ய முடியாது; அசைக்க முடியாது” என்றெல்லாம் வீராப்பும் வெட்டிப் பேச்சும் பேசிக் கொண்டிருக்-காமல் சூழ்ச்சியை முறியடிப்பது குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்று குமரி எச்சரிக்கிறாள்! எச்சரிக்கிறாள்!! எச்சரிக்கிறாள்!!!

இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ராகுல் காந்தி விடுத்த சவால் மோடியையும் அமித்ஷாவையும் உறுத்திக் கொண்டே இருக்கிறது..

பாரதிய ஜனதா கட்சிக்கு துணிவிருந்-தால் தமிழ்நாட்டில் வென்று காட்டுங்கள் என்று ராகுல் விட்ட சவாலை, அவமான-மாகவும் தங்கள் இருவரின் முகத்திலூம் பூசப்பட்ட கரியாகவும் மோடியும் அமித் ஷாவும் கருதுகின்றனர்.

இந்த கரியை துடைக்கவும் ராகுல் விடுத்த சவாலுக்கு பதில் கூறவும் அமித்ஷா, மோடி ஏவிவிட்ட பொம்மை-யைப் போல அடிக்கடி வந்து செல்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது திமுக விற்கும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கும் நல்லது.

இல்லாவிட்டால் ஹரியானாவில் காங்கிரஸ் கண்முன்னே ஏமாந்ததைப் போல நீங்களும் ஏமாந்து போவீர்கள் மீண்டும் எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை