
மலேசியத் தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் பயணிப்பவரும் ஆற்றல் மிக்க செய்தியாளருமான திருமுருகன்,
இன்று கொண்டாடப்பட்ட தேசிய பத்திரி-கையாளர் தின விழாவில் அவனா காசே(Hawana Kasih) நிதியுதவி வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
இந்த விழா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் புத்ரா உலக வாணிப மையத்தில் சிறப்பாக நடை பெற்றது.
மக்கள் ஓசை நாளிதழின் துணை ஆசிரியர் திருமுருகன் விருதையம் நிதியையும் பெற வந்தபொழுது பிரதமர் வாழ்த்து தெரிவிக்க, தகவல் துறை அமைச்சர் ஃபாமி பாட்சிலிடமிருந்து திருமுருகன் விருதையும் உதவியையும் பெற்றுக் கொண்டார்.
இதன் தொடர்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பிரதமருக்கும் தகவல் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செனட்டர் வாய்ப்பை தவறவிட்ட திருமுருகன்.. .
துன் சாமி வேலுவிற்குப் பிறகு மஇகா தேசியத் தலைவராக உருவான டத்தோஸ்ரீ கோ பழனிவேலுவிற்கு மிகவும் நெருக்கமான பத்திரிக்கை வட்ட நண்பராக விளங்கியவர் திருமுருகன்.
நாளேட்டில் பணியாற்றிய திருமுருகனை மஇகா தலைமையகத்தில் பத்திரிகை தொடர்பாளராக நியமித்துக் கொண்டார் பழனிவேல்.
அந்தப் பொழுதில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சார்பில் திருமுரு-கனை மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்க எண்ணி இருந்த பழனிவேலு, இதன் தொடர்பில் திருமுருகனுக்கும் தகவல் தெரிவித்து தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு அரசியல் களம் மாறியதால் மற்ற சூழலும் மாறிப்போயின. அதனால் கையருகே வந்த செனட்டர் பொறுப்பு திரு முருகனை விட்டு நழுவியது.
மூத்த பத்திரிகையாளர் ‘நினைவில் வாழும்’ குருமூர்த்தி ஒருமுறை சொன்னார்;
“எல்லோருக்கும் எல்லா சிறப்பும் கிடைக்காதுங்க; தகுதி இருந்தாலும் அப்படித்தான்; அதேவேளை தமிழ்த் தாயை நம்பி நம் கடமையில் பயணித்-தால் ஒரு நாள் சிறப்பும் பெருமையும் வந்துசேரும்” என்றார்.
அதன்படி தமிழ் ஊடகத்தைச் சேர்ந்த மற்ற நண்பர்களுக்கும் அவரவருக்குரிய சிறப்பும் பெருமையும் கட்டங்கட்டமாக வந்துசேர, தமிழன்னை துணை நிற்கட்டும்!


