
கோலாலம்பூர், ஜூன் 15:
நமக்கான முதல் வழிகாட்டி தந்தை என்பதுடன் நமக்கான தேவைகளைக் பூர்த்தி செய்யும் அவரை போற்றுவோம்.
பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நமக்கு வழிகாட்டியாக இருந்து நமக்கான தேவைகளைக் கண்டறிந்து அதை நிறைவேற்ற வாழ்நாளெல்லாம் அயராது பாடுபடும் தெய்வம் நம் தந்தை என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது தந்தையர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
குழந்தையை பெற்றேடுத்த தாய் ஒரு தெய்வம் என்றால் தந்தை இன்னொரு தெய்வம் எனலாம். இந்தத் தந்தையருக்-கான சிறப்பு தினத்தில், தந்தையர் அனைவருக்கும் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்-வரன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
தங்களின் வாழ்நாளெல்லாம் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் கடுமையாக உழைத்த – உழைத்துக் கொண்டிருக்கும் தந்தை-யர்களுக்கு தனது பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்வதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நம்மீது தந்தை அளவிட முடியாத அன்பு செலுத்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கண்டிப்புடன் நம்மை அவர்கள் வளர்ப்பதற்குக் காரணங்-களும் உண்டு. தங்களின் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையும் தன்னைவிட தன் பிள்ளைகள் வாழ்வில் பன்மடங்கு முன்னேறி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் தந்தையர் நம்மீது கண்டிப்பைக் காட்டு-வதற்கான காரணங்களாகும்.
இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு சிலர் தங்களின் தந்தையரை இழந்து அவர்களின் இழப்பை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். வேறு சிலருக்கு தங்களின் தந்தையோடு இந்தத் தந்தையர் தினத்தைக் கொண்டாடும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஏதோ காரணங்களால் தந்தையரை இழந்திருப்பவர்கள் அவர்களின் பங்களிப்பை இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
தந்தையரை அருகில் வைத்துக் கொண்-டிருக்கும் வாய்ப்பு பெற்றிருப்பவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறி, தந்தையர்களைத் திருப்திப்படுத்தும் வண்ணமும், மகிழ்ச்சிப்படுத்தும் வண்ணமும் நடந்து கொள்ள வேண்டும். இதை தந்தையர் தினத்தில் மட்டும் செய்யாமல், தங்களின் வாழ்நாள் முழுக்க தங்களின் கடமையாக எண்ணி அவர்கள் தங்களின் பெற்றோர்களை மகிழ்ச்சியோடு வைத்திருந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா நலன்களும் கிட்டும். அத்துடன் தங்களின் வாழ்நாள் முழுக்க பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டோம் என்ற மன நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும் என்றார் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
இந்த தந்தையர் தினத்தில் ஒவ்வொரு தந்தையும் தங்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க உறுதி கொள்ள வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஒவ்வொரு தந்தையரும் தங்களின் பிள்ளைகளின் அடுத்தக்கட்ட கல்வி என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்க தங்களின் பிள்ளைகளுக்கு உதவலாம்.
பிள்ளைகளுக்கு அடுத்த கட்டக் கல்விப்பாதையை அமைப்பதற்காக இந்திய சமூகத்தின் தந்தையருக்கு மஇகாவின் மூலமும், எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் மூலமும் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் வழிகாட்டுதலையும் வழங்க தாங்கள் முனைப்போடு செயல்படுவதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி வழங்கினார்.
நம் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி, அவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்காமல் பாதுகாத்துப் பார்த்துக் கொண்டாலே, நமது இந்திய சமுதாயம் இப்போது பெற்றுவரும் முன்னேற்றத்-தைப் போல மேலும் பன்மடங்கு உயர்வை எட்ட முடியும் என உறுதியாக நம்பலாம். அந்த இலக்கோடு அனைத்துத் தந்தையரும் பாடுபட வேண்டும் என இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.
அதே வேளையில் நமது தந்தையரின் கடந்த கால பங்களிப்பையும், நம் முன்னேற்றத்திற்கு அவர்கள் அயராது பாடுபட்டதையும் இந்த நாளில் நினைவுகூர்ந்து அவர்களின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது தந்தையர் தின வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.


