Thursday, March 19, 2026

துன் வீ.தி. சம்பந்தன் தலைமுறை கடந்து போற்றப்பட வேண்டியவர்

மலேசிய வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் மறுக்கமுடியாத வரலாற்று முகவரியாகவும் திகழ்பவர்-களில் ஒருவர்தான் மஇகா-வின் 5வது தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன்.

இந்தியர்களின் பெரும் அடையாள-மாகவும் அவர்களின் அரசியல், சமூகவியலின் முன்னோடியாகவும் போற்றப்படும் துன் சம்பந்தன் தலைமுறை கடந்தும் வானுயர உயர்த்திப் பிடிக்க வேண்டிய மாமனிதராவார்.

இந்நாட்டில் இந்தியர்களின் அடையாளம் இருக்கும் வரை துன் சம்பந்தன் என்னும் பெரும் தலைவர் வாழ்ந்து கொண்டு-தான் இருப்பார். தோட்டங்களில் நம்மினத்தின் அடையாளங்கள் தோட்டத் துண்டாடலுக்குப் பின்னர் தொலைந்து போயிருந்தாலும் அதன்வேரில் இன்னமும் துன் சம்பந்தனின் புகழ் பரவிக்கொண்டுத்தான் இருக்கிறது.

இன்றைக்கும் எத்தனையோ தோட்டங்கள் துன் சம்பந்தனின் சிந்தனைகளில் விதைக்கப்பட்ட விதைகளின் விருட்சமாய் உயர்ந்து நிற்கும் நிலையில் நாட்டில் எத்தனை எத்தனை தமிழ்ப்பள்ளிகள் அவர் பெயரை தாங்கி நிற்கின்றன என்பதையும் நாம் வரலாற்று பெருமையாக பார்த்து நெகிழ வேண்டும்.

கோலாலம்பூரின் மையப்பகுதியில் அவரது நினைவாக,அவரது சேவையின் சான்றாக ஜாலான் துன் சம்பந்தன், துன் சம்பந்தன் மோனோ இரயில் நிலையம் என்பவை பெரும் அங்கீகார அடையாள-மாகக் காட்சியளிக்கும் நிலையில் வானுயர்க் கட்டிடங்களுக்கு மத்தியில் தமிழினத்தின் பெருமையை நிமிர வைக்கும் வகையில் விஸ்மா துன் சம்பந்தன் என தமிழில் பொறிக்கப்பட்டு நம்மின பெருமை பேசுவதை நம்மில் ஒவ்வொருவரும் எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும்.

இன்றைய அரசியல் சூழல் நமக்கு பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக் கொடுக்கும் நிலையில் சுத்தமான, நேர்த்தியான, நேர்மையான அரசியல்வாதியாகவும் மக்களுக்கான தலைவனாகவும் வாழ்ந்து மறைந்த-வர்தான் துன் சம்பந்தன். மலேசிய அரசியலில் எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள்; போனார்கள்; ஆனால், நிலைத்து நிற்பவர்கள் ஒருசிலர்தான். அந்த ஒருசிலரில் என்றைக்கும் தனித்துவமாக மக்கள் மத்தியில் பதிந்த உன்னதம்தான் துன் வீ.தி.சம்பந்தன்.

இந்தியர்களின் வரலாற்றில் மட்டும் இல்லை. இந்நாட்டின் வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறை-யும் துன் சம்பந்தன் என்னும் ஆளுமை நம் கண்முன் வந்து செல்வார். அவர் இந்தியர்களுக்கு மட்டும் தலைவராக வாழ்ந்தவர் அல்லர். இந்நாட்டின் தேசியவாதியாகவும் இந்நாட்டின் பெருமைமிகு தலைவர்களில் ஒருவராகவும் வாழ்ந்தவர்.

மஇகா-விற்கு இவர் தலைமையேற்ற பின்னர்தான் அக்கட்சி மலேசிய அரசியலில் தனித்துவ செல்வாக்கையும் அங்கீகாரத்தையும் பெற்றதோடு இந்தியர்களின் ஆளுமைமிக்க கட்சியாகவும் உருவெடுத்தது எனலாம்.1955 முதல் 1973 வரையில் துன் சம்பந்தனின் தலைமைத்துவம் விதைத்த விதைகளின் விருட்சம்தான் ம இ கா என்னும் ஆலமரம்;

நாட்டின் சுதந்திரத்தின்போது, முக்கிய பேச்சுவார்த்தையில் துங்கு அப்துல் இரகுமான், துன் டான் செங் லொக் ஆகியோருடன் லண்டன் பேச்சு-வார்த்தையில் இந்தியர்களின் பிரதிநிதியாய் கலந்து கொண்ட பெருமைக்குரிய துன் சம்பந்தன் இந்நாட்டின் வரலாற்று நாயகன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

நாட்டில் அவ்வப்போது இன ரீதியிலான கசப்புகள் எட்டிப்பார்த்தாலும் நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, மலேசியர்கள் என்னும் உன்னத உணர்வு ஆகியவற்றுக்கு அன்றைய நாளில் அடித்தளமிட்டவர் துன் சம்பந்தன். தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சராக இருந்த பதவிக்காலத்தில் மலேசியர்களிடையே அவர் விதைத்த ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இன்றுவரை ஒட்டுமொத்த மலேசியர்களால் கடைப்பிடிக்கப் படுவதை மறுப்பதற்கில்லை.

நாட்டின் முதல் தேர்தல் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1955இல் நடைபெற்றது. அத்தேர்தலில் துன் சம்பந்தன் கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவையேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று சுகாதார அமைச்சர், பொதுப்பணி-அஞ்சல்-தந்தித்துறை மற்றும் ஒற்றுமைத்துறைத் அமைச்சர் என பல்வேறு அமைச்சுகளில் தனது நனிசிறந்த சேவையை வழங்கியுள்ளார்.

நாட்டின் முக்கிய மூன்று அமைச்சுகளில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்திருந்த துன் சம்பந்தன் மலேசியர்-களின் நல்லிணக்கம், ஒற்றுமை, கண்ணியம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர் முன்னுரிமை வழங்கினார். நாட்டில் பிரதமரும் துணைப்பிரதமரும் இல்லாத சூழலில் தற்காலிக பிரதம-ராகவும் திறன்பட இயங்கியுள்ள அவர், 1973 ஆகஸ்டு திங்கள் 3ஆம் நாளில் நடைபெற்ற அமைச்சரவைக்கும் தலைமையேற்றார். இது அவர்மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு மட்டுமில்லை; நாட்டின்மீது இந்திய சமுதாயம் கொண்டிருக்கும் விசுவாசத்தின் அடையாளம்.

காலம் மாறலாம்,நாடும் துரித வளர்ச்சியில் உருமாறலாம். ஆனால், இந்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வித்திட்ட நம் முன்னோர்-களில் துன் சம்பந்தன் என்னும் பெயர் வரலாற்று சுவட்டில் ஒருபோதும் மறை-யாது.இன்றைய தலைமுறை இந்நாட்டில் நந்நிலையில் வாழ்வதற்கு வித்திட்ட இந்தியத் தலைவர்களில் துன் சம்பந்தன் என்னும் முகவரியை நாம் என்றைக்கும் மறந்துவிடக்கூடாது.

நாட்டில் இன்றைக்கு அரசியல் சூழல் மாறியிருக்கலாம்.இளையோர்களின் அரசியல் ஆர்வமும் ஈடுப்பாடும் தனித்துவமாகவே உள்ளது. ஆனால், துன் சம்பந்தன் போன்ற நம் முன்னோர்-களையும் அவர்கள் செய்திட்ட அர்ப்பணிப்பு தியாகங்களையும் நாம் எல்லா காலக்கட்டத்திலும் தலைமுறை-கள் கடந்து நகர்த்த வேண்டும். அவர் செய்த சேவையும் அர்ப்பணிப்பும் காலத்தால் அழியாதது. இன்றைக்கு அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு இளைஞருக்கும் துன் சம்பந்தனின் அரசியல் வாழ்வோடு சமூகவியல் வாழ்வும் நல்லதொரு அரசியல்-வாதிக்கான பாடப்புத்தகம்.

துன் சம்பந்தனை போற்றி உணரும் இளையோர் நிச்சயம் நாளைய அரசியல் வாழ்வில் மட்டுமின்றி பொது வாழ்வி-லும் சிறந்த முன்னுதாரண மனிதர்-களாக மிளிரக்கூடும்.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்னும் வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து மறைந்த துன் வீ.தி.சம்பந்தன் தலைமுறைகள் கடந்தும் இன்னமும் மக்கள் மனங்களில் தனக்கான நிரந்தர அடையாளத்தை பதித்துதான் சென்றுள்ளார்

(இன்று ஜூன் 16, துன் சம்பந்தனின் 106-வது பிறந்தநாள் தொடர்பில் சுங்கை சிப்புட் கி. மணிமாறன் படைத்தது)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை