Wednesday, August 5, 2026

மர்லின் மன்றோவும் கென்னடியும்!

இன்று மர்லின் மன்றோ நினைவு நாள்.

உலகம் முழுவதும் அழகின் சின்னமாகவும், சினிமா- கலைக்கான அடையாளமாகவும் வாழ்ந்த அவர், 36 வயதிலேயே மர்மமான சூழலில் உயிரிழந்தார்.


அதிகாரப்பூர்வமாக அது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், அவரின் மறைவு இன்னமும் தீராத புதிராகவே உள்ளது.

மன்றோவின் வாழ்க்கை, புகழின் உச்சியில் இருந்தாலும், தனிமை மற்றும் மன அழுத்தம் நிரம்பியதாக இருந்தது. மூன்று திருமணங்களும் நிறைவடையாமல் போனது.

அவர் பாடிய “Happy Birthday, Mr. President” நிகழ்ச்சி, அமெரிக்காவின் அந்நாளைய அதிபர் ஜான் எஃப். கென்னடியுடன் மர்லின் கொண்டிருந்த தொடர்பை உலகம் முழுவதும் பேச வைத்தது.

சில மாதங்களுக்குப் பிறகு கென்னடியும் படுகொலை செய்யப்பட்டார். இருவரின் மறைவுகளும் தனித்தனியாக நடந்தாலும், அவை வரலாற்றில் இணைந்து தீராத மர்மங்களாக தோடர்கின்றன.

மன்றோவின் சிரிப்பு, கென்னடியின் உரைகள் இரண்டும் உலக அரசியல் அரங்கிலும் கலை உலகிலும் ஒளிர்கின்றன. ஆனால், அவர்களின் மறைவுகள் இருளில் மூடப்பட்ட புதிர்களாகவே நீடிக்கின்றன.

இன்று, மர்லின் மன்றோவை நினைவுகூரும் நாளில், நாம் உணர்வது.. , புகழும் அதிகாரமும் மனித வாழ்வை முழுமையாக்காது; அன்பும் நலமும் மட்டுமே வாழ்வின் உண்மையான செல்வம் என்பதுதான்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை