Friday, August 7, 2026

சொலல்வல்லார்-தமிழ்வல்லார் கலைஞர்!

அரசியல் அனல் அடிக்கும்பொழுதெல்லாம் தன்னைத் தண்மைப் படுத்திக்கொள்ள இலக்கிய சோலையில் புகுந்துவிடுவார், கலைஞர். இடக்கையில் தாளும் வலக்கையில் கோலும் ஏந்தியமைதான் இவர் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையுடன் திகழ்ந்தமைக்கு முழு காரணம்.

கலைஞர் மு. கருணாநிதி ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராக பணியாற்றியவர், திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவரான இவர் எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், அரசியல் சிந்தனையாளர் என்றும் புகழ்பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
• பிறப்பு: ஜூன் 3, 1924, திருக்குவளை, திருவாரூர் மாவட்டம்.
• இறப்பு: ஆகஸ்ட் 7, 2018, சென்னை.
• அரசியல் கட்சி: திராவிட முன்னேற்றக் கழகம்
• முதல்வர் பதவி: 1969-71, 1971-76, 1989-91, 1996-2001, 200-2011 என ஐந்து முறை தமிழ்நாடு முதல்வராக இருந்தார்.

அரசியல் பயணம்
• 14 வயதில் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார்; மாணவர்நேசன் என்ற கைஎழுத்துப் பத்திரிகை மூலம் சமூக நீதி குறித்து எழுதத் தொடங்கினார்.
• 1957-இல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• 61 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்றத்தில் இருந்தவர்; 13 தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
• திராவிட இயக்கம்: இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று, தமிழர் உரிமைக்காக போராடினார்.
• சமத்துவபுரம் திட்டம்: சாதி வேறுபாடுகளை குறைக்கும் நோக்கில் சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் திட்டம்.

இலக்கியம் மற்றும் கலை
• திரைக்கதை ஆசிரியர்: மந்திரி குமாரி (1950), பராசக்தி (1952) போன்ற படங்களின் மூலம் சமூக நீதி கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்.
• எழுத்தாளர்: தூக்கு மேடை நாடகம் மூலம் “கலைஞர்” என்ற பட்டம் பெற்றார்.
• முரசொலி: திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடு, அவர் தொடங்கியது. குடும்பம்
• மனைவியர்: ‘நினைவில் வாழும்’ பத்மாவதி அம்மாள், தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள்.
• பிள்ளைகள்: மு.க. முத்து, மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு, க. கனிமொழி, மு.க. செல்வி.

இதோ, தமிழன்னைக்கு அவர் படையலிட்ட தமிழ்வார்ப்புகள்! இலக்கிய படைப்புகள்!!
இவர் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.[16] மேலும் ‘நண்பனுக்கு’, ‘உடன்பிறப்பே’ என்னும் தலைப்புகளில் 7000-இக்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார்.

கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை, தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

திரைப்படத் துறைப் பங்களிப்புகள்
20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். தன்னுடைய் திரைக்கதை எழுத்தாற்றலை பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நாடகங்கள்

  1. அனார்கலி, 1957
  2. உதயசூரியன், 1959
  3. உன்னைத்தான் தம்பி
  4. இளைஞன் குரல், 1952 (31.8.52 ஆம் நாள் தேனி வழக்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)
  5. ஒரே முத்தம்
  6. காகிதப்பூ, 1966
  7. சாக்ரடீஸ் 1957
  8. சாம்ராட் அசோகன்
  9. சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம்
  10. சேரன் செங்குட்டுவன், 1978
  11. திருவாளர் தேசியம்பிள்ளை
  12. தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.
  13. நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது)
  14. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
  15. நானே அறிவாளி, 1971
  16. பரதயாணம் 1978
  17. பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.[20]
  18. பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர்.
  19. பிரேத விசாரணை, 13-4-1947ஆம் நாள் திருவாரூரில் திராவிடர் கழக நிதியளிப்பு விழாவில் அரங்கேற்றப்பட்டது.[21]
  20. புனித இராஜ்யம் 1979
  21. மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்)
  22. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
  23. மந்திரிகுமாரி
  24. வாழமுடியாதவர்கள் (27-7-1951 இரவு 10;30 மணிக்கு, காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்)

வரலாற்றுப் புனைவுகள்

  1. ரோமாபுரி பாண்டியன் 1974
  2. தென்பாண்டிச் சிங்கம் 1983
  3. ‎பாயும்புலி பண்டாரக வன்னியன் 1991
  4. பொன்னர் சங்கர் 1988

புதினங்கள்

  1. இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி [24]
  2. ஒரே ரத்தம், 1980
  3. சுருளிமலை
  4. புதையல், 1975
  5. வான்கோழி, 1978
  6. வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை.

குறும்புதினங்கள்

  1. அரும்பு 1978
  2. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்), 1987
  3. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953
  4. பெரிய இடத்துப்பெண் (1948 செப்)

சிறுகதைத் தொகுதிகள்

  1. ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979
  2. கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது)
  3. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் 1977, 1982, 1991
  4. கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர்.[25]
  5. சங்கிலிச்சாமியார், 1945
  6. தப்பிவிட்டார்கள் 1952
  7. தாய்மை 1956
  8. தேனலைகள் 1958
  9. நளாயினி (1956) திராவிடப்பண்ணை, திருச்சி [26]
  10. பழக்கூடை 1979 (தொடர்கதை, கடைசிக்கட்டம், புகழேந்தி, திடுக்கிடும் கதை, அபாக்யசிந்தாமணி ஆகிய கதைகள அடங்கியது)
  11. பதினாறு கதையினிலே
  12. பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)[27]
  13. மு.க.வின் சிறுகதைகள், முத்துவேல் பதிப்பகம், கோபாலபுரம், சென்னை -6.
  14. முடியாத தொடர்கதை 1982
  15. வாழமுடியாதவர்கள், மு.பதிப்பு 1950, திராவிடன் பதிப்பகம், வேலூர் (மதிப்புரை – இரா. நெடுஞ்செழியன்; 1. வாழமுடியாதவர்கள், 2 பிள்ளையோ பிள்ளை, 3. ஏழை, 4. கண்டதும் காதல் ஒழிக, 5. கங்கையின் காதல், 6.ஒரிஜினலில் உள்ளபடி…)

சிறுகதைகளின் பட்டியல்

  1. அணில்குஞ்சு
  2. அபாக்கிய சிந்தாமணி
  3. அமிர்தமதி
  4. அய்யோ ராஜா!
  5. ஆட்டக்காவடி
  6. ஆதரிக்கிறார்
  7. ஆலமரத்துப்புறாக்கள்
  8. இரகசியம்
  9. எழுத்தாளர் ஏகலைவன்
  10. ஏழை
  11. ஒரிஜினலில் உள்ளபடி
  12. கங்கையின் காதல்
  13. கடைசிக்கட்டம்
  14. கண்டதும்காதல் ஒழிக!
  15. கண்ணடக்கம்
  16. காசாலேசா
  17. காதல்கடிதம்
  18. காந்திதேசம்
  19. கிழவன் கனவு : கற்பனையருவி
  20. குப்பைத்தொட்டி
  21. சங்கிலிச்சாமி
  22. சந்தனக்கிண்ணம்
  23. சபலம்
  24. சித்தார்த்தன் சிலை
  25. சீமான் வீட்டுச் சீக்காளி
  26. சுமந்தவள்
  27. செத்தவள்கதை
  28. தப்பவில்லை
  29. தப்பிவிட்டார்கள்
  30. தாய்மை
  31. திடுக்கிடும் கதை
  32. தொடர்கதை
  33. தொத்துக்கிளி
  34. நளாயினி
  35. நந்தியூர் நரியப்பன்
  36. நரியூர் நந்தியப்பன்
  37. நுனிக்கரும்பு
  38. நெருப்பு
  39. பனங்குலை
  40. பாலைவனரோஜா
  41. பிரேதவிசாரணை
  42. பிள்ளையோ பிள்ளை
  43. புகழேந்தி
  44. புரட்சிப்படம்
  45. பெற்ற பிள்ளையை விற்ற தாய்
  46. மயிலிறகு
  47. மலரவில்லை
  48. முத்தாரம்
  49. முந்நூறு ரூபாய்
  50. வாழமுடியாதவர்கள்
  51. விஷம் இனிது
    52.வேணியின் காதலன்

கவிதைத் தொகுதிகள்

  1. அண்ணா கவியரங்கம் 1968
  2. கலைஞரின் கவிதைகள் 1977
  3. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
  4. கவியரங்கில் கலைஞர் 1971
  5. கவிதையல்ல 1945
  6. கவிதைமழை – மூன்று தொகுதிகள் 2004
  7. காலப்பேழையும் கவிதைச்சாவியும்
  8. முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு)
  9. வாழ்வெனும் பாதையில் – கவியரங்கக் கவிதைகள்

உரைநூல்கள்

  1. திருக்குறள் உரை 1996
  2. சங்கத் தமிழ் 1987
  3. தொல்காப்பியப் பூங்கா, 2003

இலக்கிய மறுபடைப்புகள்

  1. குறளோவியம் 1968, 1985
  2. சிலப்பதிகாரம் – நாடகக்காப்பியம் 1967
  3. தாய்
  4. பூம்புகார் (முரசொலி மலர்களில் வெளிவந்த தொடர்)
    தன்வரலாறு

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4,165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்தது.

பேட்டிகள்

  1. கையில் அள்ளிய கடல் 1998

  2. சொற்பொழிவுகள்
  3. தலைமையுரை, பாரிநிலையம், சென்னை.
  4. போர்முரசு
  5. ‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
  6. பெரியார் பிறவாதிருந்தால்

கட்டுரைகள்

  1. அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை.
  2. அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை.
  3. ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி.
  4. இந்தியாவில் ஒரு தீவு 1978
  5. இளைய சமுதாயம் எழுகவே
  6. இருளும் ஒளியும்
  7. இலங்கைத் தமிழா, இது கேள்! 1981
  8. இனமுழக்கம்
  9. உணர்ச்சிமாலை 1951
  10. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
  11. உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
  12. கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [29]
  13. களத்தில் கருணாநிதி 1952
  14. சரித்திரத் திருப்பம்
  15. சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [29]
  16. மயிலிறகு 1993
  17. மலரும் நினைவுகள் 1996
  18. முத்துக்குவியல்
  19. பூந்தோட்டம், திராவிடப்பண்ணை, திருச்சி.
  20. பெருமூச்சு 1952
  21. பேசுங்கலை வளர்ப்போம் 1981
  22. பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு)
  23. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
  24. திராவிடசம்பத்து 1951
  25. துடிக்கும் இளமை
  26. நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
  27. யாரால்? யாரால்? யாரால்? 1981
  28. விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி.[30]
  29. பேசும்கலை வளர்ப்போம்

சிறுகுறிப்புகள்

  1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள் ( முதல் பதிப்பு) 1978
  2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
  3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
  4. கலைஞரின் நவமணிகள் 1984
  5. சிந்தனை ஆழி 1953
  6. கருணாநிதியின் கருத்துரைகள் (முதல் தொகுப்பு) 1967
  7. கலைஞரின் கருத்துரைகள் 1971
  8. கலைஞரின் குட்டிக்கதைகள்
  9. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
  10. கலைஞரின் சொல்நயம் 1984
  11. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள், முதல் பதிப்பு 1994
  12. கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
  13. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
  14. கலைஞரின் உவமை நயங்கள் 1972
  15. கலைஞரின் முத்துக்குவியல்
  16. கலைஞரின் நவமணிகள்

கதை, வசனம்

  1. பராசக்தி மலர், 1953
  2. மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை
  3. நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
  4. திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.

பயணக்கட்டுரைகள்

  1. இனியவை இருபது

கடிதங்கள்

  1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986
  2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986
  3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986
  4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986
  5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986
  6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986
  7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986
  8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986
  9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986
  10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986
  11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996
  12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

சட்டமன்ற உரைகள்
1957 முதல் 2018-ஆம் ஆண்டு வரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
• உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009-ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.[31]
• கருணாநிதி 1970-ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
• 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
• 2010-ஆம் ஆண்டு, ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார்.
• கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி!

இறப்பு
2016-ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள கிருமி தொற்றின் காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகத் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாகக் கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றிச் சென்னையில் காலமானார்.

படைப்புகள் நாட்டுடைமையாக்கம்
மு. கருணாநிதியின் அனைத்து நூல்களும் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 22, ஆகத்து, 2024 அன்று அறிவித்தார்.

கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும் எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றிச் செய்ய முடிந்ததற்கு நாளும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை