
மலேசிய இந்தியர் காங்கிரஸ்- மஇகா பேரியக்கத்தின் எட்டாவது தலைவராக விளங்கியவர், இன்று எட்டாத தொலை-விற்குச் சென்றுவிட்டார்.
அண்மைக் காலமாக உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டிருந்த அவர், உடல் நிலை மிகவும் மோசமான நிலை-யில் கோலாலம்பூர் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று, ஜூன் 17, காலை 8:00 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்-பட்டுள்ளது.
அரசியல் எல்லையைக் கடந்து, தனிப்-பட்ட முறையில் மிகவும் நல்லவராக வாழ்ந்த கோ.பழனிவேலு, ஒரு பத்திரிகையாளராக தன் வாழ்க்கை-யைத் தொடங்கியவர். பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிமையானவர்.

மஇகா-வை ஒரு தலைமுறைக் காலத்திற்கு வழிநடத்திய தானைத் தலைவர் துன் சாமிவேலனாருக்குப் பின், தலைவரான பழனிவேலு, அவரின் அரசியல் வழிகாட்டி சாமிவேலுவைப் போலவே நள்ளிரவானாலும் தொலை-பேசிவழி பேசுவார்.
பகலில் பேசமுடியாவிட்டால், இரவில் நிச்சயம் மீளஅழைத்து, விவரம் கேட்கக் கூடிய மூன்று தலைவர்கள், மஇகா-விற்கு வரிசையாக வாய்த்தனர்; சாமிவேலு, பழனிவேலு, டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் ஆகியோர் அம்மூவர்.

பினாங்கில் பிறந்த இவர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1972-இல் பட்டம் பெறுவதற்கு முன்பே மஇகா-வில் இணைந்து தலைநகரில் நிலை கொண்டு விட்டார். உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை 18 ஆண்டு-களாக ஆக்கிரமித்து இருந்த இவர், சமூக-குடும்ப நலத்துறை துணை அமைச்சர், புறநகர் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர், தோட்டத்தொழில்-மூலப்பொருள் துறை துணை அமைச்சர், மஇகா தேசியத் தலைவரானபின் செனட்டர் ஆகி பிரதமர் துறை அமைச்சர், 2013 பொதுத் தேர்தலின்போது, டத்தோஸ்ரீ சி.கி. தேவமணியை அகற்றிவிட்டு, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வென்று இயற்கை வளம் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உயர்ந்தார்; அரசியல் முதிர்ச்சியின்மை காரணமாக அரசியல் சூழல் தங்கத் தாம்பூலத்தில் வைத்து வழங்கிய மஇகா தேசியத் தலைவர்-கேபினெட் அமைச்சர் ஆகிய இரண்ட-னையும் தானாக இழந்த ஏமாளித் தலைவர் இவர்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டாலும் நாட்டை ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்ட தேசிய முன்னணி-யின் மும்மூர்த்திகளாக 20-ஆம் நூற்-றாண்டு முடிவிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளங்கியவர்கள் துன் மகாதீர், துன் லிங் லியோங் ச்சிக், சாமிவேலு ஆகியோர்.
இந்த மூவருமே தங்களுக்குப்பின் தத்தம் கட்சிக்கு பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை; அடையாளம் காணவும் இல்லை; அந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை; கடைசிவரை கட்சித் தலைமையை ஆக்கிரமித்து இருக்கவே விரும்பினர்;
நெருக்கடி முற்றிய நேரத்தில், அந்தச் சூழலுக்கேற்ப, தங்களுக்கு இசைவான-ஒருவரை கொலுவேற்றினரே அன்றி கட்சி நலங்குறித்தும் எதிர்காலம் பற்றியும் மூவருமே அக்கறைப்படவில்லை; அந்த வகையில், சாமிவேலுவால் கொலு-வேற்றப் பட்டவர்தான் ஜி.பழனிவேலு.

அதுவரை கம்பீரமாக இருந்த பழனி-வேலு, தேசியத் தலைவரானபின், ஆன்மிகத் தலைவரைப்போல, தலை-முடிக்கு கார்சாயம்பூசாமல் வெண்முடி, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, கழுத்தில் ருத்திராக்க மணிமாலை, கையில் கயிறு என ஒரு மடத்துத் தலைவரைப்போல உருமாறினார்.
இவரின் தலைமைத்துவம் மஇகா அரசியலில் ஒரு கருப்பு அத்தியமாக இருந்தாலும் மீண்டும் இரு கேபினெட் அமைச்சர்கள் என்னும் பெருமையை இந்திய சமுதாயத்திற்கு ஏற்படுத்தினார். அப்பெருமையை இவரே சீர்க்-குலைத்தார்.
2010 டிசம்பர் 06-இல் மஇகா தேசியத் தலைவராக அமர்த்தப்பட்டார் பழனிவேலு. டிசம்பர் 06, உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்; இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு துணைபுரிந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிறந்த நாள்; இங்கிலாந்து ராணிக்காக அடிமை அத்தியாத்தை நிறுவ துணைபுரிந்-தாலும் இவர் சிறந்த அரசியல்வல்லார்; தேசத் தந்தை துங்குவின் நினைவு நாள்; அரசியல் சட்ட மேதையும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான அண்ணல் அம்பேத்கருக்கும் நினைவு நாள்;

மோடியைவிட கம்பீரத் தோற்றத்தில் ஜி பழனிவேலு
இந்தியா என்னும் நாடு உருவாவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே கடற்படையுடன் நாடாண்ட தமிழன் இடம்பெறாத அமைச்சரவை-யுடன் கடந்த 11 ஆண்டுகளாக புது டில்லியை பிராமணர்களும் பிராமண அடிமைகளும் ஆளுவதற்கு வழிகோலிய ‘பாபர் மசூதி இடிப்பு’ச் சம்பவம் இடம்-பெற்ற நாளும் அதே டிசம்பர் 06-தான்.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சுவடுகளைக் கொண்ட நாளான டிசம்பர் 06-இல், ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்ற பழனிவேலு, அரசியல் பாரம்பரிம், அரசியல் நுட்பம், சமுதாய நலம் என எதைப்பற்றியும் சிந்திக்காமல், கவலைப்படாமல் வல்லடி அரசியல் நடத்தினார். ச.சுப்பிரமணி-யனுடன் பச்சையான லாவணி அரசியல் நடத்தினார்.

சாமிவேலுவைப் போல, தலைமைப் பதவியைப் போராடிப் பெற்றிருந்தால் அதன் அருமை தெரிந்திருக்கும்; வலி புரிந்திருக்கும்; சூட்சமமும் ஏற்பட்டி-ருக்கும்; சாமிவேலுவால் இலவயமாக எடுத்துக் கொடுக்கப்பதவி யென்பதால்-தான் ஒரேயொரு தேசியப் பேரவையைக் கூட, அதுவும் மலாக்காவில் 2014 நவம்பரில் சீராக நடத்தமுடியவில்லை.
டத்தோ த. மோகன் போன்றோர், மூன்று உதவித் தலைவர்களுக்கும் மத்திய செயலவைக்கும்தான் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்; இவரோ, “முடியாது,-ஆகாது” என்றதுடன் தேசியத் தலைவர் உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் புதுத் தேர்தல் என்று வீராப்பு காட்டி, கைவசம் இருந்த தலைவர் பதவி, அமைச்சர் பொறுப்பு என எல்லாவற்றையும் இழந்தார்.

ஹிண்ட்ராஃப் எழுச்சி காரணமாக தேசிய அரசியலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது; 2008 பொதுத் தேர்தலில் சாமிவேலுவைப் போல இவரும் தோற்றார். இப்படிப்பட்ட சுழலில், கட்சியில் ஒற்றுமை முக்கியம்; இந்திய சமுதாயத்தின் வலிமை அதைவிட முக்கியம் என்பதை யெல்லாம் பழனிவேலு எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை.
பழனிவேலு, தன் அரசியல் நடவடிக்கை-யைவிட, சாமியிடமும் அடுப்பங்கரை-யிலும் குறிகேட்டு எந்த முடிவையும் எடுக்கும் தலைவராக பின்னேற்றம் கண்டதால், பதவிகளை மட்டுமல்ல; பெயர்-புகழ்-ஆதரவு-சமூக மரியாதை-அரசியல் அந்தஸ்து உள்ளிட்ட அனைத்-தையும் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எது எவ்வாறிருந்தபோதும், 1949 மார்ச் முதல் பிறந்து, ஆசிரியர் பணி, தேசிய அருங்காட்சியகத்தில் துணை ஆய்வாளர் என்றெல்லாம் இளம் வயதில் அனுபவம்பெற்று 77 வயதை எட்டியிருந்த கோ.பழனிவேலு இன்று மறைந்தாலும், இந்திய சமுதாய வரலாற்றிலும் மஇகா-வின் நெடும்பயணத்திலும் ஓரோரத்தில் பழனிவேலுவிற்கு நிச்சயம் இடம் உண்டு.


