
புதுமை உலகில் மனிதனுடன் எல்லா வகையிலும் போட்டிக்கு நிற்கிறான் இயந்திர மனிதன்.
தற்பொழுது ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து கொண்டதால் அடித்தாலும் விதமாக துள்ளி குதிக்கிறான் எந்திர மனிதன்.
அப்படிப்பட்ட இயந்திர மனிதன் இறகுப்பந்து (பேட்மிட்டன்) விளையாட்டிலும் மனிதனுக்கு நேருக்கு நேர் நின்று, சரிநிகர் சமானமாக இறகுப் பந்தை பாய்ந்துப் பாய்ந்து அடிப்பது வியப்பாக தெரியவில்லை!

சுவிட்சர்லாந்து நாட்டின் அறிவியல் ஆய்வாளர்க் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், மனிதர்களுக்கு போட்டியாக பேட்மிண்டன் விளையாடுகிறது.
இந்த ரோபோ’வால் ஷட்டில் காக் பாதைகளை கணித்து, அரங்கைச் சுற்றி செல்ல முடிகிறது..
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, புதிய நுட்பங்களை முயற்சிக்கவும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் முடிறது இந்த இயந்திர மனிதனால்!

என்ன ஒரு மாறுதல் என்றால், பூப்பந்து விளையாடும் அசல் மனிதனுக்கு இரண்டு கால்கள் இருக்க, இந்த இயந்திர மனிதனுக்கு நான்கு கால்கள் உள்ளன.
பார்ப்பதற்கு ஒரு கட்டத்தில் மாட்டைப் போல உடல்வாகு அமைந்திருந்தாலும் பந்தை அடிப்பதிலும் பாய்ந்து பாய்ந்து மட்டையை பயன்படுத்திலும் இந்த இயந்திர மனிதனின் வேகம் வியப்பைத் தருகிறது!

தகவல்: பிபிசி தமிழோசை


