
மலேசிய இந்திய சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து மஇகா தவறியதால் தான் ஹிண்ட்ராஃப் இயக்கம் தோன்றியது என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் கெடா மாநிலத் தலைவர் விவேகானந்தன் அம்மாசி தெரிவித்துள்ளார்.
ஹிண்ட்ராப் எதுவும் செய்யவில்லை; மஇகாதான் இந்திய சமுதாயத்திற்கு உரிய கடமையை ஆற்றியதாக மஇகா துணைத் தலைவர் அண்மையில் தெரிவித்த கருத்திற்கு விவேகானந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2013 மே 05, 13-வது பொதுத் தேர்தல் சமயத்தில் அப்போதைய பிரதமர் நஜீப், ஹிண்ட்ராப் இயக்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் மலேசிய இந்தியர் சமூக- பொருளாதார உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ செடிக் என்னும் பெயரில் தொடங்கப்பட்டது.
இதுதான் கடந்த 12 ஆண்டு காலமாக தொடர்கிறது இதன் தொடர்பில் மஇகா எதுவும் செய்யவில்லை; இப்போதைய பிரதமர் அன்வாரும் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்று விவேகானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


