
நாட்டின் மையப் பகுதியில் பிரபலமான வழிபாட்டு தலங்களில் ஒன்றான செந்தூல் அருள்மிகு காளியம்மன் கோவிலுக்கு பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், 50,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் செந்தூல் காளியம்மன் கோவில் திருவிழா மிகப் பெரிய அளவில் நடைபெறும்
இரண்டு தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் பால் குடங்கள் ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.
தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்டுமான திருப்பணிக்கு உதவும் வகையில் கோலாலம்பூர் கூட்டுரசுப் பிரதேச மாநிலத்தின் ஒரே ஒரு தமிழ் எம்பி ஆன பிரபாகரன் 50,000 வெள்ளி வழங்கினார்.
நேற்றிரவு கோவிலுக்கு நேரில் வருகை தந்த அவர், 50,000 வெள்ளிக்கான பணவோலையை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.


