
2026 ஆகஸ்ட் 31 மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு டத்தோ ஆனந்தன், லண்டன் மாநகரை நோக்கி இன்று மோட்டார் சைக்கிளில் கோலாலம்பூரில் இருந்து பயண த்தைத் தொடங்கினார்.
நூறு நாட்களை உட்படுத்திய இந்தப் பயணம், தாய்லாந்து லாவோஸ் சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட
25 நாடுகள் வழியாக 24,700 கி.மீ. பயணத்தை டத்தோ ஆனந்தன் மேற்கொள்ள இருக்கிறார்.
இடது முழங்காலில் அடிபட்டிருந்தாலும் டத்தோ ஆனந்தன் வேட்கை குன்றாமல், மெர்டேக்கா தினத்தன்று(மலேசிய விடுதலை நாள்) லண்டனில் உள்ள லண்டன் மாநகரின் உள்ள மலேசிய தூதரக அலுவலகத்தில் தூதரின் தலைமையில் டத்தோ ஆனந்தன் மெர்டேக்கா தினத்தைக் கொண்டாட உள்ளார்;

நாடு – நகரவழிப் பாதைத் தவிர மண் சாலை, காட்டுவழிப் பயணம், ஆறு, சேறு-சகதிப் பாதைகளை எல்லாம் உள்ளடக்கி இந்த நூறு நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் டத்தோ ஆனந்தன்.
SHADOWFOX என்னும் ‘Bikers’ குழுவை நடத்திவரும் ஆனந்தன் மோட்டார் சைக்கிள் பயணத்தின்வழி தொடர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
இத்தகைய சாகசப் பயணம் தொடர்பில் முதல் முதலில் தமிழ்நாட்டின் (இந்தியா) தலைநகரம் சென்னை சாகசப் பயணத்தை மேற்கொண்டார்.

இடையில் கொரோனா பருவத்தினால் இத்தகைய சாகச பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்தாலும் தேசிய அளவில் இதே போன்ற மோட்டார் சைக்கிள் சாகசப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த மூன்றாவது பயணத்தின்வழி லண்டன் மாநகரை நோக்கி இன்று புறப்படுகிறார்.
இந்த சாகசப் பயணத்தை மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ. டாக்டர் ச. விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். மஇகா தேசிய முன்னாள் உதவித் தலைவர்களில் ஒருவரும் மேனாள் செனட்டருமான டத்தோ சி.சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல் சிவசுப்பிரமணியன், மத்திய செயலவை உறுப்பினர் என்ரூ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

நாடு முழுவதிலும் இருந்து சாகச மோட்டார் சைக்கிள் ஒட்டியர் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு டத்தோ ஆனந்தனை வாழ்த்தி வழி அனுப்பினர்.



