Monday, April 20, 2026

தமிழக முதல்வர் நலம் பெற்று இல்லம் திரும்பினார்!

அண்மைச் சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் தங்கி மருத்துவ ஓய்வு எடுத்துக் கொண்ட அதேவேளை, தமிழ்நாட்டின் நிருவாகத்தையும் ஒருசேர கவனித்து வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின், “நலம் பெற்று வீடு திரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது அக்கறையுடன் விசாரித்து நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீதி அரசர்கள், அரசு அதிகாரிகள், திரைக் கலைஞர்கள், தன் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தன் நெஞ்சார்ந்த நன்றியை வெளிப்படுத்தி உள்ளார்.

மருத்துவமனையில் சிறப்பான முறையில் மருத்துவம் அளித்து, தான் விரைந்து நலம்பெற உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும் நன்றியும் என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்காக உழைப்பை வழங்கும் தன் கடமையை என்றும் தொடர்வேன் என்று திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை