
உலகத் தமிழர்களின் ஒருங்கிணைந்த பொருளாதார மறுமலர்ச்சி கருதி, கோலாலம்பூரில் நவம்பர் 15-17 வரை நடைப்பெற்ற உலகத் தமிழர் 11-ஆவது பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜனை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ பா. சகாதேவன் வரவேற்றார்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை அரசியலை மையமாகக் கொண்ட தியாகராஜன், மலேசியத் தமிழர் அரசியல் வட்டத்திலும் நன்கு அறியப்பட்டவர்.
அப்படிப்பட்ட தியாகராஜன், கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழரின் 11-ஆவது பன்னாட்டு பொருளாதார மாநாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கிய மலேசிய, இந்திய அரசுகளைப் பாராட்டியதுடன் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நரேந்திர தாஸ் தாமோதர மோடி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.


