Monday, April 20, 2026

மித்ரா சார்பில் சமூக நல உதவி! -பிரபாகரன் நேரில் வழங்கினார்!!

Made with LogoLicious Add Your Logo App

மலேசிய இந்தியர் சமூக கல்வி பொருளாதார உருமாற்றப் பிரிவான ‘மித்ரா’ முன்னெடுத்துள்ள ‘சினார் சஹாயா’ உதவித் திட்டத்தின் அடிப்படையில் நலிந்த நிலையில் இருக்கின்ற 793 குடும்பங்களுக்கு வெ.1,139,730 உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி மக்களுக்கும் உதவும் வகையில் இந்த சினார் சஹாயா உதவி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ், ஸ்ரீ இந்தான் பைடூரி, ஸ்ரீ கூச்சிங், பத்து ஆகிய பகுதிகளிலுள்ள 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பிரபாகரன் நேரில் சந்தித்து உதவித் தொகையை வழங்கினார்.

முன்னதாக, ஏழ்மை நிலையுள்ள இந்த குடும்பத்தினர் மேற்குறிப்பிட்ட சமூக உதவித் திட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பம் செய்திருந்ததாகவும். அவர்களுக்கு மாதம் 500 வெள்ளி வீதம் மூன்று மாதங்களுக்கு 1,500 வெள்ளி வழங்கப்படும் என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை