
இயற்கை வைத்தியர், பாரம்பரிய மருத்துவர் என்றெல்லாம அழைக்கப்படும் இளம் மாற்று மருத்துவர் திருமதி பிரீத்தி, கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
அண்மையில் கோலாலாம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் 11-ஆவது பொருளாதார மாநாட்டில் பிரீத்தி, மூன்று நாள் மாநாட்டின்போதே உணவு-தேநீர் இடைவேளைப் பொழுதுகளில் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனையை வழங்கினார்.
குதுகு வலி, மூட்டுவலி, தலைசுற்றல், வயிறு உப்புதல், பெண்கள் தொடர்பான நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ ஆலோசனை-நிவாரணம் அளிக்கும் இவர் நவம்பர் 25-ஆம் நாள் வரை கோலாலம்பூரில் தங்கி இருப்பார்.
தண்டுவடப் பகுதியை நீவி விடுதல் மூலம், குறிப்பாக தண்டுவடப் பாதையில் உள்ள நரம்பு, இரத்த நாளங்களை வருடி அவற்றை சீரான முறையில் இயங்கவைப்பதன்வழி அதிகமாக நோய்களைத் தீர்க்க முடியும் என்கிறார் இவர்.
கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பகுதிகளில் இருக்கும் இவரைச் சந்திக்க விரும்பும் பொதுமக்கள் +91 80155 12819 என்னும் எண்வழி அழைத்துப் பேசலாம்.


