
அன்வார் இப்ராகிம் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்ததை தேர்தல் ஆணையத்தில் மறைத்து தேர்தலில் போட்டியிட்டதைப்போல, மாட்சிமைக்குரிய மாமன்னரிடமும் மறைத்து 24-11-2022இல், பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பதால் அதை எதிர்த்து சட்ட வல்லுனரும் மலேசிய முன்னேற்றக் கட்சி எம்ஏபி தேசியத் தலைவருமான பொன். வேதமூர்த்தி வழக்கு கொடுத்துள்ளார்.
சுதந்திர மலேசியாவின் ஏழு சகாப்த வரலாற்றில் ஒரு பிரதமருக்கு எதிராக இப்படிப்பட்ட ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது இல்லை.
சிறைவாசம் ஏற்றிருந்த 2018 காலக்கட்டத்தில் அரசியல் சாசனம் பிரிவு 42இன்படி,
அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு மாட்சிமைக்குரிய மாமன்னரின் கருணைச் செயலேத் தவிர, அன்வார் குற்றம் இழைக்கவில்லை என்று பொருள்படாது என்று மலேசிய முன்னேற்ற கட்சி எம்ஏபி தேசிய உதவி தலைவர் டத்தோ செல்வம் செல்லையா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசியலமைப்புச் சட்டம் 48(1)(e) மற்றும் 48(3) ஆகிய
பிரிவுகளின்படி 2023 மே மாதம் வரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அன்வார் தடை விதிக்கப்பட்டிருந்தார்.
இந்த உண்மை யாவும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்ததுடன் அல்லாமல் அன்வார் தான் வகிக்கின்ற பிரதமர் பதவி அரசியல் சாசனப்படி சரியா என்பதன் தொடர்பில் சட்டசவாலையும் நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டு இருக்கிறார்.
எனவே, அன்வார் அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் பிரதமர் பதவியைத் துறப்பதுதான் சரியாக இருக்கும் என்று சமூகவாதியுமான செல்வம் செல்லையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


