
மலேசியத் தமிழ் ஊடக வட்டத்தைச் சேர்ந்த நீண்ட கால புகைப்பட கலைஞர் பி மலையாண்டி, இன்றைய விநாயகர் சதுர்த்தி சமய விழாவை முன்னிட்டு நாளிதழ் செய்திக்காக படம் பிடிக்கச் சென்றவர் அப்படியே தானும் விநாயகரை வழிபட்டு, அவன் அருளை நாடினார்.
இன்று உலகெங்கும் வாழ்கின்ற இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பில், மலேசியாவிலும் எங்கெங்கு பிள்ளையார் வழிபாட்டு தலங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் விநாயகரை வணங்கவும் அருளை நாடவும் பக்தப் பெருமக்கள் திரண்டுள்ளதை சமூக ஊடகத் தகவல்வழி அறிய முடிகிறது.

அந்த வகையில் ஊடகராகவும் பக்தராகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விதமாக ஒரே சமயத்தில் இரு வேலையை மேற்கொண்டுள்ளார் மலையாண்டி.


