Tuesday, February 17, 2026

நலிந்த குடும்பங்களுக்கான அட்சய பாத்திரத் திட்டம்தொடரும்:புந்தோங் அருள்மிகு விசாலாட்சி- விசுவநாதர் ஆலய புதியத் தலைவர் முத்துகுமார்!

ஈப்போ, ஜுலை:27
புந்தோங் சுங்கைப்பாரி சாலை
சி.என். அண்ணாதுரை பாலத்திற்கு
அருகில் வீற்றிருக்கும் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் சிவாலய பரிபாலன சபாவின் ஆண்டுக் கூட்டத்தில், ஆலயத்தின் புதிய தலைவராக இளம் தொழில்முனைவர் .முத்துக்குமார் ரெங்கநாதன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

புதியவர்களுக்கு வழிவிடும்
நல்லெண்ணத்தில் முன்னாள் தலைவர் ‘தொண்டர்மணி’, ‘ஸ்ரீகாசி’ தியாகராஜன் குருசாமி, போட்டியில் இருந்து விலகியதால் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

இந்த ஆலயத்தின் சார்பில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நலிந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவி நல்கப்படும் அட்சய பாத்திர திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சமூக நலத்திட்டம் வழக்கம்போல தொடரும் என்று புதிதாக தேர்வாகியுள்ள தலைவர் முத்துக்குமார் ரங்கநாதன் உறுதி அளித்தார்

(தகவல்: ந.ஆ.யுவராஜ்)

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை