Thursday, April 23, 2026

பொது மன்னிப்பு பெற்ற அன்வார் சமர்ப்பித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்: நாட்டின் நலம் கருதி பொன். வேதமூர்த்தி கோரிக்கை!

நாட்டின் இறையாண்மையும் மாமன்னரின் மாட்சிமையும் நாட்டிற்கு பெருமை தறுவன; இதற்கு கட்டியம் கூறுவது நாட்டின் அரசியல் சாசனம். அத்தகைய அரசியல் சாசனத்தைவிட மேலான ஒருவர் எவரும் இல்லை என்பதால் 2018 மார்ச் 16 பொது மன்னிப்பின்போது மாட்சிமைக்குரிய மாமன்னரிடம் அப்போது சிறைவாசம் இருந்த அன்வார் சமர்ப்பித்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம் ஏ பி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அன்று சிறைவாசம் இருந்தபொழுது பொது மன்னிப்பு கேட்டு அப்போதைய மாமனாரிடம் மூன்று முறை விண்ணப்பம் செய்திருந்தார்.

2015 மார்ச் 16-லும் 2017 பிப்ரவரி 27-யிலும் அவர் செய்த பொது மன்னிப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் 2018 மே 16 இல் செய்த மூன்றாவது பொதுமன்னிப்பு கோரிக்கை மனு ஏற்கப்பட்டு அன்றே அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், அன்வார் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு காலத் தடையிலிருந்து விடுவிக்கப்படவில்லை;

அரசியல் சாசனப் பிரிவு 42-இன்படி அவர் பொது மன்னிப்பு மட்டும்தான் பெற்றாரேத் தவிர, அரசியல் சாசன பிரிவு 48(3)-இன்படி, அன்வார் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு தடையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தனிப்பட்ட மனிதர் சம்பந்தப்பட்டது அல்ல; மாறாக நாட்டை ஆளுகின்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சம்பந்தப்பட்டது என்பதால், பொது மன்னிப்பின்பொழுது அவர் அரண்மனையில் சமர்ப்பித்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அதே பொதுமக்களின் சார்பில் கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சருமான பொன் வேதமூர்த்தி அன்வாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்வார் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றிராத நிலையில் அவர் அதை தேர்தல் ஆணையத்தில் மறைத்து தேர்தலில் போட்டியிட்டதைப் போல அரண்மனையிலும் மறைத்து பிரதமராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.

இவ்விரு நடவடிக்கையும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்பதுடன் அன்வார் அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை என்பதையும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக பொது மன்னிப்பின்பொழுது அன்வார் சமர்ப்பித்த ஆவணங்கள் வெளியிட வேண்டும் என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன் வேதம்மூர்த்தி இரண்டாவது முறையாக வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை