Saturday, June 6, 2026

தந்தை பெரியார் 147-வது அகவை விழா!

திராவிட இயக்கத் தலைவர்கள் ஷா ஆலம் நகரில் அணிதிரள்கின்றனர்!!

சுயமரியாதைச் சூரியன், பகுத்தறிவுப் பெட்டகம், மனிதநேய மாண்பாளர், பெண்களின் அடுப்பங்கரை எல்லையைத் தகர்த்த பெண்ணிய போராளி, ஆரியத்தின் இடுப்பை ஒடித்த பெருஞ்சம்மட்டிக்காரர், காசுக்கு வாங்கிய பிள்ளையார் சிலையை மட்டுமல்ல நீதிமன்றத்தையும் சிதறவிட்ட போர்க்குணவாதி, மறைந்து அரை நூற்றாண்டைக் கடந்தபின்னும் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். ஆரியக் கூட்டத்திற்கு சிலிர்க்கும் சிம்மமாக காட்சிதரும் தந்தை பெரியாருக்கு 2025 செப்டம்பர் 17, 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மலேசியத் தமிழர் தன்மான சிந்தனைப் பேரவை ஏற்பாட்டில் அந்த உலக சுயசிந்தனையாளருக்கு 147-ஆவது அகவை நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் இந்திய நிருவாகியருள் ஒருவரான ஆஷ் துரை, தமிழர்களிடம் திணிக்கப்பட்ட சாதி-மத சழக்கை சிறுபிள்ளை விளையாட்டென்றும் பேயென்றும் சொன்ன வீரத் துறவி வள்ளலாரடிகள், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு போர்முனை ஆலோசகராகப் பதவியேற்கச் சென்ற சட்டவல்லாளர்-திராவிட தேசத்தை நிறுவ பெரியார் மிகவும் நம்பியிருந்த திராவிடக் கொழுந்து ‘சர்’ ஏ.டி. பன்னீர்செல்வம், ஹிட்லரையே மடக்கிய நேதாஜி போன்றோரில் ஆஷைத் தவிர மற்றையோரின் மர்ம மரணத்தில் ஆரியத்தின் வஞ்சகமும் இரத்தக்கறை படிந்த கரங்களும் சங்கமித்துள்ளன.

இவ்வளவையும் நிறைவேற்றி முடித்தபின்னும், இந்தியாவை முற்றும் முழுதாக ஆக்கிரமிக்க முடியாமல், ஆர்.எஸ்.எஸ். ஆரிய இயக்கத்தின் ஆட்சி கடந்த 13 ஆண்டுகளாக புதுடில்லியை ஆளுகின்ற நிலையிலும் இந்தக் கொலைகார அமைப்பு நூற்றாண்டை எட்டிவிட்ட இந்தக் காலத்திலும் திராவிட மண்டலத்தில் பரிதவித்து நிற்கிறதென்றால் அதற்கு சீனப் பெருஞ்சுவரினும் பெருஞ்சுவராக நிற்கின்ற தந்தை பெரியாரின் கொள்கை முழக்கம் மட்டுமே.

அத்தகைய வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் தொடர்பில் நாளை,-15-9-2025 திங்கட்கிழமை பிற்பகல்-3.00 மணியளவில் நாட்டின் நடுநாயகப் பகுதியான சிலாங்கூர் மாநிலத்தின் புதிய அரச நகரம் ஷா ஆலம், 19-அவது
செக்சன் பகுதியில் உள்ள பொது அரங்கில் இயக்கத் துணைத் தலைவர் மானமிகு த. பரமசிவம்-தலைமையில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில், இந்திய சமூகத்தின் மூத்தத் தலைவர்களில்ஒருவரும்- துணையமைச்சருமான டான்ஸ்ரீ க.குமரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைக்க இருக்கும் இவ்விழாவில்-இயக்கத் தேசியத்தலைவரும்-பிரபல ஊடகவி
யலாளருமான-‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி பேருரையாற்று
வார்.

இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர், மானமிகு சா.பாரதி, மாந்தநேய திராவிடர்க் கழகத் தலைவர் மானமிகு நாக. பஞ்சு, பேராக் பெரியார் பாசறை நிறுவனரும் மதிக முன்னாள் துணைத் தலைவருமான ‘கொள்கைக்கனல்’ கெ.வாசு ஆகியோர் பங்கேற்று உரையாற்
றவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் நூற்றாண்டை எட்டுகின்ற கெ. வாசுவிற்கு தன்மானப்பெருஞ்சுடர்’ விருதும் த. பரமசிவத்திற்கு விருதும் டான்சிறி குமரனால் வழங்கப் படவிருக்கின்றன..

பிரபல பாடகர் எம்.எஸ். பிரிட்டோ வழங்கும் கொள்கைப்பாடல்
களும் இவ்விழாவில் இடம்பெற இருக்கின்றன .

துணைச்செயலாளர் மானமிகு பெ.கோவிந்தசாமியின் நன்றியுரையுடன்
விழா நிறைவுறும்என்பதால், பொதுமக்கள் நிறைந்தளவில் கலந்து; ஆதரவளிக்
குமாறு; தலைமைச்செயலாளர் சி.மு. விந்தைக்குமரன் கேட்டுக் கொண்டு
ள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை