Thursday, April 23, 2026

எதிர்கால இலக்குடன் நம் மாணவர்கள்கள்விப் பயணத்தைத் தொடரவேண்டும்! -டாக்டர் சத்திய பிரகாஷ்

இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யும் நம் மாணவர்கள் தங்களின் குறிக்கோளையும் எதிர்கால இலக்கையும் முன்வைத்து, அதன் அடிப்படையில் மேற்கல்வியைத் தொடர வேண்டுமென எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் குதியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் நினைவுறுத்தினார்.


தமிழ்மொழியைக் கற்பதனால் நமக்கு பல வகையில் நன்மை உண்டு. அதனை கற்க தவறியவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


“வாழ்க்கையில் எந்த உயரத்தை எட்டினாலும் தம்முடையை பெற்றோரைப் போற்ற வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும். அவர்கள் நமக்காக செய்த தியாகத்தை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டுமென அவர் சொன்னார்.
குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழும் இந்த மண்ணில் நம் சமுதாயம் நிலைபெற, மொழியையும் பண்பாட்டையும் காப்பது நம் கடமையாகும்”.


இன்று ‘அந்தாரா காப்பி’யிலுள்ள ‘எஸ்பி கேர்’ தலைமையக மண்டபத்தில் எஸ்பிஎம் தேர்வில் தமிழ்மொழி எழுதவுள்ள மாணவர்களுக்கு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியபோது சத்திய பிரகாஷ் மேற்கண்டவாறு கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் சிலங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் ப.புவனேஸ்வரன், எழுத்தாளர் சிவாலெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தகவல்:
வெற்றிவாணன், இயக்குநர்-தமிழ் லென்ஸ் இணைய ஊடகம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை