Saturday, June 6, 2026

அறிவுலகம் தொழும் மண்டைச் சுரப்பை கொண்ட தந்தை பெரியார்!கோலாலம்பூரில் 146-ஆவது பிறந்தநாள் விழா!!

ஆரியத்தின் இடுப்பை ஒடித்த இவர், மறைந்து அரை நூற்றாண்டைக் கடந்த பின்னும் அப்பணியை இன்னமும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற திராவிடர்-தமிழர்இனநல மொழிநலப் போராளி; காவலாளி; அறிவுப் பெட்டகமாம் தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்தநாள் விழா இன்று, இப்பொழுது கோலாலம்பூர் பிரிக் ஃபீல்ட்ஸ், ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில், கிள்ளான் மாவட்டம், தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் பத்மாவதி முருகேசு தலைமையில் மாணவர்கள் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் மானமிகு சா. பாரதி, , மலேசிய திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவரும் மாந்தநேய திராவிடர்க் கழகத்தின் ஆலோசகருமான மானமிகு இரெ.சு. முத்தையா, பொதுச் செயலாளர் அன்பரசன் சண்முகம், மலேசியத் தமிழர் தன்மான இயக்கப் பேரவை பொதுச் செயலாளர் வானமிகு விந்தை குமரன் கழகத்தின் கல்விக் குழு பொறுப்பாளர் ஆசிரியர் அழகன், பெ மு அன்பு இதயன், ஆவுடையார், பந்திங் இராமசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மு கங்கம்மாள், மலாக்கா அலோர் காஜா தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பார்வதி ஆறுமுகம், காஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு கழகத்தின் தேசியத் தலைவர் மானமிகு நாக. பஞ்சு தலைமை வகித்து வருகிறார்.

இளம் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி முடிந்தவுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்ளும் சொல்லரங்கம் தொடர இருக்கிறது.

இதற்கிடையில் வண்ணம் தீட்டும் போட்டியில் கலந்து கொள்கின்ற இளம் மாணவர்களுக்கான பரிசளிப்பு முடிந்ததும் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாள் விழா முறைப்படி தொடங்க இருக்கிறது.

பெண்களின் விடுதலைக்காக தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதைப் பற்றி இளம் மாணவர்கள் பேசி வருகின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை