
பன்னாட்டு அரசியலில் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்துகின்ற இஸ்ரேலியப் படைகளால் ‘குளோபல் சுமூத் ஃபுளோட்டிலா’மனிதாபிமான உதவி கப்பல் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு மலேசியாவின் பாரம்பரிய அரசியல் இயக்கம்-ம.இ.கா. கவலை தெரிவிப்பதாக அதன் தேசிய தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.
மலேசிய அரசாங்கம் பன்னாட்டு அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாகவும் நிபந்தனையின்றியும் விடுவிப்பதற்கு வாதிடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச கடல் பகுதியில் அமைதியான மனிதாபிமானப் பணியை இடைமறிப்பது சர்வதேச சட்டத்தின் மதிப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
அதோடு காசா மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.
அமைதி மற்றும் மனிதாபிமான நிவாரணத்திற்கான உலகளாவிய முன்னெடுப்பை மலேசியா நீண்ட காலமாகப் பாதுகாத்து வருகிறது. இது சம்பந்தமாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காசாவிற்கு மனிதாபிமான உதவி தடையின்றி வழங்கப்படுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளின் தலையீட்டை தீவிரப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்னேஸ்வரன் தெரிவித்த உள்ள ள்ளார்.


