
போக்கிரி நடிகன் தலைமை வகிக்கும் போக்கிரிக் கட்சியின் போக்கிரித் தனத்தால் 42 உயிர்கள் அநியாயமாக மாண்டதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதும் பிராமண சனாதனக் கட்சியான பாஜக-வும் அதன் அடிமையாகிவிட்ட அதிமுக கட்சியும் அடையும் ஆனந்தத்திற்கும் உள்ளுக்குள் துள்ளிக் குதிக்கும் குதூகலத்திற்கும் அளவே இல்லை.
கடந்த செப்டம்பர்த் திங்கள் 27-ஆம் நாள் சனிக்கிழமை ஏறக்குறைய எட்டு மணி நேர பசி-பட்டிணி, தொண்டை வறட்சி, தாகம், வெய்யிலின் கொடுமை, அளவை மிஞ்சிய கூட்ட நெரிசலால் அலைக்கழிப்பு, சிறு நீர்-மலம் கழிக்கும் இயற்கை உபாதைகளை அடக்கி-அடக்கி வைத்ததால் ஏற்பட்ட உள-உடல் சீர்குலைவு, பசி மயக்கம், நடிகன் ஜோசஃப் விஜய்யை பார்க்க முடியவில்லையே என்னும் ஆதங்கம் உள்ளிட்ட காரணங்களால் 41 பேர் அகால மரணத்தை எட்டிவிட்ட நிலையில், இந்த அவலங்களால் மனம் கலங்கிய விஜய்யின் ரசிகர்களில் ஒருவன் தற்கொலை செய்துகொண்டது உட்பட 42 பேரின் உயிர்ப் பிரிவிற்கு காரணமான பயல்கள், அப்பொழுதே ஓடி ஒளிந்துவிட்டனர்.
இவன்களில் ஒரு சிலன், பாவாடையைக் கட்டிக்கொண்டு தொலைபேசியை அடைத்தும் விட்டான்கள்.
வீராப்பெல்லாம் தெறித்து சிதறி, தொடை நடுங்கிக் கிடக்கும் இந்தப் பயல்களை வளைத்து, ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொள்வதற்கு இதுதான் தருணம் என்று, பிராமண கொள்ளிவாய்ப் பிசாசுக் கட்சியான பாஜக-வும் ஒரு காலத்தில் ஜெயலலிதா வாகனத்தின் வட்டகையை நக்கிய அடிமைகளான தாங்கள் இப்பொழுது ஆரிய-சனாதன அடிமைகளான நரேந்திர மோடி-அமித் ஷா ஆகியோரின் கால்களை அண்டிப் பிழைக்கும் கலங்கமில்லா பச்சை அடிமைகள் என்று நிரூபிக்கிறோம் பாருங்கள் என்று பறைசாற்றும் இடைப்பாடி பானா சானா, “வெள்ளை அறிக்கை வேணுமா? வெள்ளறிக்காய்தான் இருக்கு” என்று சொன்ன கபோதி அமைச்சன் இராஜேந்திர பாலாஜி போன்ற அக்மார்க் அடிமைகள் வழிநடத்தும் அதிமுக என்னும் அமித்ஷாதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்தை வளைக்கப் பார்க்கின்றன.
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கின்ற இந்தக்கும்பல்களைக் கொண்ட கூட்டணிக்குப் பெயர் ஜனநாயகக் கூட்டணியாம்.
இந்த நேரத்தில், போக்கிரி நடிகர் ஜோசஃப் விஜய், அறிவும் தெளிவும் தனக்கு கொஞ்சமாவது இருக்கிறது என்று நம்பினால், சமயம் பார்த்து காலை வாறும் இந்த வஞ்சகக் கூட்டத்தைப் பற்றி கொஞ்சமாவது சிந்தித்தால் உய்யும் வழி பிறக்கும்.
ஆனால், அதற்கு வழியில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்துள்ள ஜோசஃப் விஜய் வாங்கிய திரைப்பட கூலியெல்லாம் கள்ளப் பணமாச்சே; நல்லப் பணமாக வாங்கினால் வரி கட்ட வேண்டுமே என்பதற்காக, கோடம்பாக்கத்துக்காரன்கள் அத்தனை பேரும் வாங்கிக் குவித்த அத்தனையும் கள்ளப் பணம்தானே;
அதை வைத்துத்தான் புது டில்லிக்காரன் காலமெல்லாம் கோடம்பாக்கத்துக் காரனை மடக்குகிறான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
திமுகவை உடைப்பதற்காக இந்திரா காந்தியும் மோகன் குமார மங்கலமும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தைக் காட்டி(வெளிநாட்டு படப்பிடிப்பு செலவில் அந்நிய செலாவணி மோசடிக் குற்றச்சாட்டு) எம் ஜி ஆரை எப்படி மடக்கினார்களோ, அதைப்போல, ஜோசஃப் விஜய்யின் கள்ளப்பண சம்பளத்தையும் வரி ஏய்ப்பு மோசடியையும் காட்டி திமுக-விற்கு எதிராக பாஜக கொம்பு சீவிவிட்டுள்ள நிலையில்,

எங்களை மதிக்காமல், நீ தனி ஆவர்த்தனம் புரிகிறாயா பயலே என்று போக்கிரி நடிகன் ஜோசஃப் விஜய்யைப் பற்றி மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்த பார்ப்பன மேலாதிக்க சனாதன பாஜக-விற்கு, 42 பேரின் மரணத்திற்கு காரணமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜோசஃப் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் இணைத்து அடக்கிவைக்க இதுதான் தருணம் என்று செயல்பட, அடிமையின் அடிமையான அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவன் போக்கிரி நடிகன் விஜய் ஜோசஃபிற்கும் குழி பறிக்கிறது காலை வாறிவிட!
இந்த நிலையில், திமுக-வின் காலை வாறிவிட, அதன் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனே காய் நகர்த்துவதுதான் விந்தையாக இருக்கிறது; இது, விந்தையல்ல; பதவி மோகம் கொண்டு அலையும் திருமாவளவனின் உள்ளக்கிடக்கைதான் இது என்பதை அறிந்தோர் அறிவர்.
2016-இல் திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுத்ததில் திருமாவளவனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு; கெடுவான் கேடு நினைப்பான் என்பதைப் போல, நடிகர் விஜயகாந்த், வைகோ, ஜி.கே. வாசன், இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. இராமநாதன் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அமைத்த மக்கள் நலக் கூட்டணி அடியோடு மண்ணைக் கௌவ, இவர்கூட காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மண்டியிட நேர்ந்தது. இவரின் நிலையாவது பரவாயில்லை; கடைசிவரை அதிமுக-விற்கு கிலி கொடுத்து வந்தார். பாவம், விஜயகாந்த்-தான் வைப்புத் தொகையைக் கூட தற்காக்கத் தவறினார். நழுவும் மீனான வைகோ, கடைசி நேரத்தில் பின்னங்கால் பிடறியில் படும்படி பின்னோட்டம் எடுத்தார்.

இதனால், தடுமாறிய திருமாவளவன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் பங்கு என்னும் முழக்கத்தை பேச்சு மூச்சில்லாத பொம்மையாக்கி, மூலையில் முடக்கிப் போட்டிருந்தார்.
இப்பொழுது திமுக கூட்டணிவழி, தொடர்ந்து 2-ஆவது முறையாக 2 எம்பி-க்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் என கையில் கொஞ்சம் பசை இருப்பதால், மீண்டும் மாநில நிருவாகத்தில் பதவி-ஆட்சியில் பங்கு என்னும் வேட்கை துளிர்விட்டு, அதன் அடிப்படையில் ஏக்கப் பெருமூச்சுடன் திரிகிறது விசிக.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானபோது, குழவியை எடுத்து வயிற்றில் குத்திக்கொண்ட கதை யெல்லாம் தெரிந்ததுதானே; அப்போது, ஆதவ் அர்ஜுனா என்னும் இந்திக்காரனை(தமிழச்சியின் மடியில் பால் குடித்திருந்தால் இப்படி யெல்லாம் பெயர் வைப்பான்களா?) ஏவிவிட்டு, பின்னால் நின்று நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்தானே இந்தத் திருமாவளவன்.
கக்கன் அமைச்சராக இருந்தால் என்ன? இல்லாவிட்டல்தான் என்ன? திமுக ஆட்சியில் சத்தியவாணி முத்து முக்கிய இடத்தை வகித்தால் என்ன? இல்லாமல்தான் இருந்தால்தான் என்ன? திமுக ஆட்சியில் பட்டியலின நலத்துறை உருவாக்கப்பட்டு, அத்துறைக்கு அதேப் பிரிவைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் சரி, வரதராஜன் என்னும் பட்டியலினத்தாரை நீதிபதியாக கலைஞர் உட்காரவைத்து அழகு பார்த்தாலும் சரி, இவை யாவும் தொல், திருமாவளவன் என்னும் விசிக தலைவர் அத்தகைய பதவிகள் ஏதாவது ஒன்றில் அமர வைக்கப்பட்டால்தான் பட்டியல் இன மக்கள் மீட்சி பெற்றதகவும் அரசியலில்வஞ்சிக்கப் படாமலும் ஒதுக்கப்படாமலும் சமமாக நடத்தப்படுகின்றனர் என்றும் பொருளாகும் என்று விசிக-வின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் அதற்காக நாம் என்ன செய்ய முடியும்?
அவரின் பதவி வேட்கையை, மோகத்தை அவரே தணித்திக் கொண்டாலன்றி வேறு மார்க்கமில்லை.
தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்றத் தெர்தலில் திமுக-விற்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடவேக் கூடாது என்ற எண்ணத்தில் இருப்பது, பாஜக-வோ அல்லது அதிமுக-வோ அல்ல!
விசிக-வும் அதன் தலைவர் திருமாவளவனும்தான்.
திமுக-விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால்தான், தனக்கு ஏதும் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில், திமுக-விற்கு ஏதாவது நெருக்கடியொ சறுக்கலோ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான், விஜய்யை கைது செய்யாத அளவிற்கு திமுக-விற்கும் தவெக-விற்கும் இடையே பாதாள ஒப்பந்தம் இருக்கிறது என்று புலம்புகிறார் திருமாவளவன்.
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்ததன் தொடர்பில், ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் உட்பட தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதில் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோரின் முன்பிணை விண்ணப்பத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஓர் ஆணையத்தை தமிழ்நாட்டு அரசு அமைத்துள்ள நிலையில், அந்த தனி நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கிடைத்த பின், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறது தமிழ் நாட்டரசு.
இந்தநிலையில், கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாட்டு அரசு அச்சப்படுகிறதா என்ற கேள்வியையும் திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
காலமென்னும் நல்லாசிரியர் தீர்ப்பெழுதுவார் எல்லாவற்றுக்கும் நேரம் வாய்க்குபொழுது!


