
16வது பொதுத் தேர்தலில் பன்னிரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிடம் 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று மலேசிய இந்திய மக்கள் கட்சிதா தலைவர் எஸ் பி புனிதன் இன்று தெரிவித்தார்.
மலேசிய தேசிய மக்கள் கட்சியின் 2025-ஆம் ஆண்டுக் கூட்டம் தற்பொழுது தோட்ட மாளிகையில் நடைபெற்ற வருகிறது.

பெரிக்கத்தான் கூட்டணித் தலைவரும் மேனாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தற்பொழுது சிறப்புரை ஆற்றி வருகிறார்.
இதற்கு முன்னர் மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் புனிதன் தலைமை உரை ஆற்றினார்.

தற்பொழுது மேடையில் முன்னாள் பிரதமராக வீற்றிருக்கின்ற முகைதீன் யாசின் 16வது தேர்தலுக்கு பிறகு நாளைய பிரதமராக பொறுப்பேற்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியைந் தொடங்கிய பொழுது கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்பது குறித்து ஐயம் இருந்ததாகவும் தற்பொழுது அத்தகைய அச்சம் யாவும் நீங்கி நம்பிக்கை ஒளி பிறந்து விட்டதாக புனிதன் தெரிவித்தார்.

“இதற்குக் காரணம, இதோ இந்த அரங்கத்தில் திரண்டு இருக்கின்ற நீங்கள் அனைவரும்தான் காரணம்” என்று தோட்ட மாளிகை அரங்கத்தில் திரண்டு இருந்தவர்களைக் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தினார்.
மலேசிய இந்திய சமுதாயத்தின் இளைஞர்ப் படையுடன் சமுதாயத்தின் பெரும்பாலானவர்களும் கட்சியில் இணைந்திருப்பதால் எதிர்காலம் வளமாக அமையும் என்றார்.
மலேசிய இந்திய சமுதாயத்தினர் 22 லட்சம் பேரின் எதிர்காலத்திற்கு பெரிக்கத்தான் கூட்டணி நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்றும் புனிதம் நம்பிக்கை தெரிவித்தார்.


