Sunday, April 19, 2026

‘இலக்கிய வேந்தர்’ சரவணனுக்கு புதுடில்லியில் வரவேற்பு!

புதுடில்லி, நவ.30:
தில்லி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை புது தில்லிக்குச் சென்ற டத்தோஸ்ரீ மு.சரவணனை, டில்லி கம்பன் கழகத்தார் வரவேற்றனர்.

இராஜேந்திர பெருமன்னன் தமிழ ராஜியம் அமைத்த கடார மண்ணில் பன்னாட்டுத் தரத்துடன் திகழும் உயர்க்கல்வி நிறுவனமான ‘எய்ம்ஸ்ட்’ பல்கலைக்கழக இணைவேந்தரும் மலேசிய கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான ‘சொல்வேந்தர்’ மு.சரவணன், அரசியல்வல்லான் என்பதுடன் இலக்கியவாணராக உருமாறியுள்ளதால், அண்மைக்காலமாக மேலை-கீழை நாடுகளின் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் இலக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில், இன்றும் நாளை(டிசம்பர் 01)யும் என இரு நாட்களுக்கு நடைபெறும் டில்லி கம்பன் கழகத்தின் 2024ஆம் ஆண்டு கம்பன் விழாவிலும் கலந்து கொளவதற்காக
புது டில்லி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்றடைந்த முன்னாள் அமைச்சருமான அவரை, தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள், செயலாளர் எஸ். பி. முத்துவேல், பொருளாளர் சரவண ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ். ரவிச்சந்திரன் மற்றும் ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் மேலாளர் காந்தி ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை