
செமினி, அக். 25:
ஐபிஎப் கட்சி தேசிய முன்னாள்
தலைவர் டத்தோ மு. சம்பந்தனின் துணைவியார் டத்தின் ஜெயலட்சுமி நேற்றிரவு காலமானர் என்று அவரின் புதல்வரும் ஐபிஎப் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான கணேஷ் குமார் சம்பந்தன் வேதனையோடு தெரிவித்தார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மேல் No.5, Jalan Semenyih Mewah 15, Taman Semenyih Indah, Green
Villa 43500 Semenyih என்னும் முகவரியில் உள்ள எங்கள் இல்லத்தில் நடைபெறும் இறுதி சடங்கிற்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் சிரம்பான் இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
இதனிடையே டத்தின் ஜெயலட்சுமி மறைவுக்கு ஐபிஎப் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தைப் பதிவு செய்துள்ளது.

‘நினைவில் வாழும்’ டத்தோ சம்பந்தன்-டத்தின் ஜெயலெட்சுமி இணையர்
கணவர் டத்தோ சம்பந்தனுடன் இணைந்து ஐபிஎப் கட்சியின் வளர்ச்சிக்கு டத்தின் ஜெயலட்சுமி முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் மறைவு செய்தியை அறிந்து ஐபிஎப் கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் பெரும் துயரம் அடைந்திருப்பதாக ஐபிஎப் கட்சியின் தலைவர் டத்தோ லோகநாதன் தெரிவித்தார்.


