
இந்திய தேர்தல் வரலாற்றில் பீகார் மாநிலத் தேர்தல் இந்த அளவுக்கு தேசிய அளவிலும் உலக அளவிலும் முக்கியம் பெற்றதில்லை.
இந்த நிலையில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலா மூலம் ஐந்தாவது தவணையாக தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவுடன் இந்த முறை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முதல்வர் அம்மாநிலத்தை ஆளவிருக்கிறார்.
பௌத்த சமயத்தின் தொடக்கப் புள்ளியாக விளங்குகின்ற அந்த மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
1951 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பிறகு இந்த தேர்தலில்தான் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கட்டங்களாக நடைபெற்ற பீகார் மாநில தேர்தலில் ஏறக்குறைய 68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை விட ஏறக்குறைய 10 விழுக்காடு அளவிற்கு அதிகமானது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் ஆறாம் நாளும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11லும் நடைபெற்ற நிலையில் இன்று நவம்பர் 14 காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலில் பாரதீய ஜனதாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
243 தொகுதிகளைக் கொண்டு பீகார் சட்டப்பேரவையில் 122 இடங்களில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும்.
அந்தர்பல்டி குமார் என்று பெயர் எடுத்துள்ள நித்திஷ் குமார் தலைமையிலான கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து ஆளுக்கு நூற்று ஒரு இடங்களில் போட்டியிட்ட இந்தத் தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பாரதி ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து வாக்குத்திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ள மோசடி அம்பலமான நிலையிலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே இந்த முறையும் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று ஆரம்பக் கட்ட தேர்தல் முன்னிலை நிலவரம் தெரிவிக்கிறது.
இந்த வகையில் அந்த மாநிலத்தில் மிகவும் வலிமை பெற்ற அரசியல் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவியின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அந்த மாநில ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு வெள்ளி விழாவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் ஒரு பின்னடைவு தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


