Sunday, April 19, 2026

டத்தோஸ்ரீ சரவணன் காசி யாத்திரை!

டத்தோஸ்ரீ டாக்டர் மு.சரவணன், தற்பொழுது பக்தி பெருங்கடலில் தத்தளிக்கிறார். அதிலிருந்து அவர் நலமாக மீள, பரம்பொருள் துணை நிற்கட்டும்.

அருள்மிகு காசி விசுவநாதரும் அருள்மிகு அன்னபூரணி அம்மையும் சரவணனின் இறைநேசப் பயணத்தில் நல்லருள் நல்கட்டும்.

இவ்விரு இறைவரையும் வணங்கத்தான், தற்பொழுது காசி இறைநகரில் புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார் சரவணன்.

டில்லி கம்பன் கழகத்தின் ‘2024 கம்பன் திருவிழா’வில் கலந்துகொள்வதற்காக நவம்பர் 29-ஆம் நாள் புது டில்லி சென்ற சரவணன், இன்றிரவுதான் தாயகத்திற்கு திரும்புகிறார் என கம்பன் கழகத் தலைவர் கே.வி.கே. பெருமாள் காலையில் தெரிவித்தார்.

அதற்கிடையில் பரம்பொருளாம் சிவனின் தாட்தொட காசியில் சிவநேயப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் இந்த இறைநேசர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை