
கோலாலம்பூர் நவ –
19
தமிழ் லென்ஸ் ஆசிரியரும் அரசியல் செய்தியாளருமான வெற்றி விக்டர் இன்று ம.இ.கா.வில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செய்தார்.
ம.இ.கா. உருவாக்கி உள்ள செயலி மூலம் நேரடி உறுப்பியத்தின் வாயிலாக இணைந்துள்ளார்.
இப்போது உள்ள ம.இ.கா. எல்லா வகையிலும் உயிர் பெற்று
தைரியமாக குரல் எழுப்பி , எந்த கட்சிக்கும் அடிபணியாமல் இந்திய சமுதாயம் பக்கம் நிற்கிறது. வரலாற்றுப்பெருமைமிக்க இந்தக் கட்சியை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கும்போது ஒரு மரியாதைகுரிய கட்சியாக உருவாக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
இந்தத் தருணத்தில் சில அம்னோ தலைவர்கள் ம.இ.கா., இந்தியர்களின் ஆதரவை இழந்து அம்னோவை நம்பிப் பிழைக்கும் ஒரு கட்சி என சொல்லி வருகின்றனர்; இந்திய சமுதாயம் ம.இ.கா.-வை ஆதரிக்கவில்லை எனவும் சொல்கின்றனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க ம.இ.கா. ஆட்சியில் இருந்தபோது பல முறை சீண்டி எழுதிய வெற்றி விக்டர்.
இன்று ம.இ.காவில் இணைந்தார்.
தான் இந்தக் கட்சியில் இந்த காலக்கட்டத்தில் இணைந்தது இளைஞர்கள் மத்தியில் ம.இ.கா மீண்டும் ஒரு புரட்சியை எழுப்பி உள்ளது , புதிய தலைமுறைக்கு ம.இ.கா.-வின் வரலாறு தெரிய வேண்டும். அதே நேரத்தில் ம.இ.கா.-வின்வழி இந்திய சமுதாயத்தின் தேவை,, எதிர்ப்பார்ப்பை நாமே வகுப்போம் உருவாக்குவோம்.
இந்தத் தாய்க் கட்சியை,, இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்தக் கட்சி என சாடுவதை பொறுத்து கொள்ள முடியாது… ஒரு இந்தியனாக சமுதாயத்தின்மீது அக்கறை கொண்ட ஒரு செய்தியாளராக ம.இ.கா. இந்திய சமுதாயத்தின் குரல் என்பதை உணர்த்த இளைஞர்களை ஒரு குடையின்கீழ் ஒற்றுமையாக்க இந்திய சமுதாயத்தின் சக்தியை மற்றவர்களுக்கு உணர்த்த தான் ம.இ.கா.-வில் இப்போது இணைந்து சேவை செய்ய வருவதாக வெற்றி விக்டர் தெரிவித்தார்.
ம.இ.காவில் இணைவது தொடர்பான தன் எண்ணத்தை தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணனிடம் தெரிவித்து விட்டதாக வெற்றி விக்டர் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு கைகோர்த்து துணை நிற்போம் என்று மேலும் தெரிவித்துள்ளார் வெற்றி விக்டர்.


