Thursday, April 2, 2026

ஹிண்ட்ராஃப் எழுச்சி 18-ஆம் ஆண்டு நாளில் இந்தியன் செட்டல்மெண்ட் குடிருப்பாளர்கள் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஒன்று கூடியுள்ளனர்!

மலேசிய மக்கள் கனவிலும் நினைத்திராத அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய
ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி
18-ஆம் ஆண்டு நாளான இன்று பாரம்பரிய பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒன்றுகூடி உள்ளனர்.

இன்று நவம்பர் 25ஆம் நாள் இரவு 8:00 மணி அளவில் அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அலுவலகத்தின்முன் அணி திரண்டுள்ளனர்.

Pusat Khidmat Rakyat Dun Sungai Tua, Jalan 1, Dataran Selayang, Batu Caves என்னும் முகவரியில் உள்ள அமிருடின் அலுவலகத்தில் தற்பொழுது இந்தியன் செட்டில்மெண்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஹிண்ட்ராஃப் அமைப்பினர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், நடவடிக்கைகா குழு பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் என அதிகமானோர் ஒன்று கூடியுள்ளனர்.

தங்களின் பாரம்பரிய வீடுகள் உடைக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், பாதிக்கப் ப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் அங்கேயே நிலைத்திருக்க குரல் கொடுக்க வேண்டி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அதிகமானோர் இந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளனர்.

காவல்துறையினரும் சூழ்ந்திருந்த இந்த ஒன்று கூடலில் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி முகமட் ஆரிஃப் என்பவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள முன் வந்தார்.

அதேவேளை இந்த ஒன்று கூடலுக்கு தலைமை ஏற்றுள்ள பொன் வேதமூர்த்தி, மந்திரி பெசார் வரும்வரை காத்திருப்பதாக சொன்னார்.

அதிகாரி முஹமட் ஆரிஃப், தற்பொழுது சிலாங்கூரில் 5 மாவட்டங்களில் வெள்ளம் அதிகரித்து அதிகமான புகலிட மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு மந்திரி பெசார் சென்றுள்ளதால் வருவதற்கு நீண்ட தாமதமாகும்.

அதனால், தற்பொழுது கோரிக்கை மனுவை தான் பெற்றுக்கொண்டு அதை மந்திரி பெசாரிடம் பின்னர் சேர்ப்பிப்பதாக சொன்னார்.

அதற்கு மறுமொழியாக பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் உடைபடும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் நடவடிக்கைக் குழு பொறுப்பாளர்கள், ஹிண்ட்ராஃப் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி உள்ளிட்டோர் மந்திரி பெசார் அலுவலகத்திற்கு முறையாக அறிவித்த பின்னர்தான் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வரும்வரை காத்திருந்து அவரிடம் நேரில் கோரிக்கை மனுவை ஒப்படைப்பதாகத் தெரிவித்து, மெழுகுவர்த்தியை ஏந்தியவண்ணம் காத்திருக்கின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை