Thursday, April 23, 2026

ஆயிரம் குறை சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காப் போராடும் ஒரே கட்சி மஇகா: -டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன்

ஆயிரம் குறை சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காகப் போராடும்
ஒரேக் கட்சி மஇகா தான்; இதை எவராலும் மறுக்க முடியாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் கூறினார்.

மஇகா மகளிர் முன்னாள் சேவையாளர் செயற்குழு மற்றும் மஇகா நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில மகளிருடன் ஒன்றுக்கூடும் நிகழ்வு நேற்று சிரம்பானில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று பேசினார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.

மஇகா கட்சி இந்திய சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சியாக திகழ்ந்து வருகிறது.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மஇகா கட்சியும் அதன் தலைவர்களுமதாதான் முன்வருவார்கள்.

இந்திய சமுதாயத்திற்காக பாடுபடுகின்ற அதேவேளை, இந்திய சமுதாயத்திற்கு ஏதும் பிரச்சனை என்றால் நாம்தான் முன் நிற்கிறோம்; மற்ற கட்சியில் உள்ளவர்கள் அப்படி செய்ய முடியாது; காரணம் அவர்கள் பல இன மக்கள் கட்சியில் உள்ளனர.

அப்படி அவர்கள் இந்திய சமுதாயத்திற்காக வாய் திறந்தால் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.

நம் சமுதாயத்திற்கென பாடுபடுகின்ற கட்சியயான மஇகா, ஏராளமான இந்திய பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது; அதேசமயத்தில் உருவாக்கியும் வருகிறது.

கடந்த காலத்தில் நமக்கென்று எந்த கல்லூரியும் கிடையாது. நம் பிள்ளைகள் வெளிநாடு சென்று கல்வி கற்க்க வேண்டும் என்றால் பலரிடம் உதவி கேட்டு கல்வி கற்று வந்தனர்.

Made with LogoLicious Add Your Logo App

ஆனால் இப்பொழுது நமக்கென்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உள்ளது. அதன்மூலம் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறோம்.

அதேபோல், டேஃப் கல்லூரியும் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரி மூலமும் பல தொழில் நுட்ப பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கி வருகிறது.

மஇகா கட்சி சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட்டை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தில் பல மாணவர்களின் கல்விக்கு நிதி வழங்கி வருகிறோம்.

Made with LogoLicious Add Your Logo App

மஇகா கட்டடம், 1/2 ஏக்கர் நிலமாக இருந்தது. ஆனால் இன்று 4 ஏக்கர் நிலத்தை மஇகா கட்டிடத்தின் அருகில் வாங்கியுள்ளது.

அந்த இடத்தில் பல மாடிக்கொண்ட கட்டிடத்தை கட்டவுள்ளது.

மஇகா கட்சி ஒரு மானமுள்ள கட்சி: பட்டம் பதவிக்காக யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.

நாம் சுயநல அரசியல் நடத்தவில்லை; பொதுநல கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Made with LogoLicious Add Your Logo App

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை