Thursday, April 23, 2026

பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் சமய ஆகம நடைமுறையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்!

கோயில் வழிபாடு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை நிர்ணயிப்பதில் சிவநேசன் தலையிடக்கூடாது என்று மலேசிய சோசலிஸ்ட் கட்சி-பிஎஸ்எம் பேரா மாநில செயலவை உறுப்பினர் கி. குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்

சமீபத்தில் 1-12-2025ல் மதுரை உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தை பாரம்பரிய இடத்திலிருந்து வேறு இடத்தில் ஏற்ற தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பிற்கு கோவில் நிர்வாகம், சமயவாதிகள், மதுரை மக்கள், சமூக இயக்கங்களுடன் தமிழ்நாட்டு அரசு சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Made with LogoLicious Add Your Logo App

மதுரை நீதிபதி தீர்ப்புக்கு முன், ஏற்கெனவே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த சிக்கல் எழுந்தபொழுது பிரிவியூ கவுன்சில் மற்றும் பிற தீர்ப்புகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

எல்லாக் கோயில் நிகழ்ச்சிகள் (ஆகம முறைகள்) தீர்மானிக்கப்பட வேண்டியது கோயில் ஆணையத்தால்; நீதிமன்றத்தால் அல்ல.மற்றவர்கள் தலையிட முடியாது.

மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பு கோயில் ஆணையத்தால் பின்பற்றப்படவில்லை, அதனால் Supreme Court-ல் தமிழ்நாட்டு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆகவே, சிவநேசன், கோவில் ஆகம, நடை முறை வழிபாடு விவகாரங்களா மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் தலையிட வேண்டாம்; இவை நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட மரபுகளாக இருக்கின்றன. இதனை கோவில் நிர்வாகங்களே பார்த்துக்கொள்ளட்டும்.

எந்த குருக்களைக் கும்பாபிசேகங்களுக்கு அழைக்க வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் அதிகாரம் என்பதைத் தீர்மாணிக்க திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் ஒரு முன்னுதாரணம் என்பதை சிவநேசன் நினைவில் கொள்ளவேண்டும் என்று கி.குணசேகரன்
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை