
ம.இ.காவில் கால்பதித்து ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று செயலாற்றிக் கொண்டிருக்கும் தான்ஸ்ரீ டாக்டர் ச.விக்னேஸ்வரனுக்கு
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து என்று மஇகா-வின் பத்தாவது தலைவரின் அறுபதாவது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கட்சியின் துணைத் தலைவர் ஸ்ரீ டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு அரசாங்க பலம் இல்லை என்றாலும் பலமிக்கக் கட்சியாக இன்றும் இயங்கி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் அதன் தலைமைத்துவம் என்றால் அது மிகையாகாது.
அர்ப்பணிப்பு, அரவணைப்பு, தொலைநோக்குப் பார்வை, தைரியமிக்க தலைமைத்துவம் ஆகியவற்றின் மூலம் மக்கள் நலனை முன்னிறுத்தி கட்சியை வழிநடத்தும் ஒரு சிறந்த தலைவராக வலம் வருகிறார் தான்ஸ்ரீ.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தின் உயரம் அல்ல,
பொறுப்பின் ஆழம். கேட்பதில் பணிவு, தீர்மானத்தில் தைரியம்,
செயலில் தீரம் என உண்மையான தலைமைத்துவம் கொண்டவர் நம் தலைவர்.
தங்களின் சேவை தொடர்ந்து சிறக்கட்டும். ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் மேலும் பல சாதனைகளும் தங்களைத் தொடர்ந்து
அலங்கரிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு
என்னும் ஐயன் திருவள்ளுவரின் குறளை முன்வைத்து, தன் தலைவருக்கு மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சொல்வேந்தரும் இலக்கிய வேந்தருமான சரவணன்.


