Saturday, June 6, 2026

மஇகா தலைவர் நூற்றாண்டு காண்க! -குமரி வாழ்த்துகிறாள்!!

மலேசிய இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய அரசியல் இயக்கம், இந்த நாட்டின் முதல் அரசியல் கட்சி, பிரிட்டிஷ் மலாயா மண்ணில் விடுதலை வேட்கையை விதைத்த கட்சி, இன்று ஆயிரம் பேர் ஆயிரம் பேசினாலும் அன்று இந்த மலாயா தேசத்தின் விடுதலைக்காக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு, தோட்டப் பாட்டாளி சமுதாயமாக இருந்தாலும் ஜான்சி ராணி படையில் இந்தியப் பெண்கள்கூட இணைந்து விடுதலை முழக்கம் எழுப்பி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் அந்த ராணுவ நடவடிக்கையின் மீட்சிசியாக ஜனநாயக பாதையில் மலர்ந்ததுதான் மலேசிய இந்தியர் காங்கிரஸ்.

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு இதுவெல்லாம் தெரியாத அளவிற்கு வரலாறு புரட்டி அமைக்கப்பட்டுள்ளதால் நாம் இதை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

அத்தகைய பாரம்பரியத்தில் தோடர்ந்து மலேசிய இந்திய சமுதாயத்தின் காப்பாளனாகத் திகழ்கின்ற மலேசிய இந்தியர் காங்கிரஸின் பத்தாவது தலைவராக விளங்கும் தான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் இன்று 60ஆவது பிறந்த நாளை எட்டுகிறார்.

அவர் நீடு வாழ்ந்து நெடிய புகழையீட்டி மலேசிய இந்திய சமுதாயத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும்!

பொன் விழாவை கடந்து, நேற்றுடன் மணி விழாவையும் கடந்து, இன்று அறுபத்து ஒரு வயதை எட்டுகின்றான் தான்ஸ்ரீ டாக்டர் ச
விக்னேஸ்வரனின் அரசியல் கலந்த வாழ்க்கைப் பயணம்,, பவள விழாவை எட்டி தொடர்ந்து நூற்றாண்டையும் எட்டி வாழ்வாங்கு வாழ்ந்திட குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்!!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை