
ம இ கா தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ. டாக்டர் ச. விக்னேஸ்வரனின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமையக மண்டபமான நேதாஜி அரங்கம் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூடி உள்ளதால் கோலாகல கோலம் போட்டுள்ளது.

விக்னேஸ்வரன் இன்று 61 வயதை எட்டியதை ஒட்டி கட்சி தலைமையகத்தில் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சொல்வேந்தர் மு. சரவணன், தேசிய உதவி தலைவர்களை தொடர்ந்து கட்சியின் தேசிய பொருளாளரும் சமய-சமூக தொண்டருமான டத்தோ ந. சிவக்குமார், விக்னேஸ்வரனுக்கு ஆளுயர மாலை அணிவித்து வானுயர் சிறப்பு பெற வாழ்த்துத் தெரிவித்தார்.

மஇகா தற்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் கட்சியினர் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் விலங்குகின்றனர் என்பதற்கு தற்பொழுது மஇகா தலைமைத்தில் நடை பெறுகின்ற காட்சியே சாட்சியாகும்.
விக்னேஸ்வரனுக்கு அணிவிக்கின்ற முரட்டு மாலைகள் மலைபோல் குவிந்துள்ளது.

ஆனாலும் கூட்டம் குறைந்த பாடில்லை; தேசிய பொறுப்பாளர்களைத் தொடர்ந்து மாநில அளவிலான பொறுப்பாளர்களும் தொகுதி-கிளைப் பொறுப்பாளர்களும் கட்சி ஆதரவாளர்களும் நண்பர்களும் தங்களின் அன்புத் தலைவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக நிற்கின்ற வரிசை மாளவில்லை. முடிய முடிய வாசல் வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது.



