
கோலாலம்பூர், டிச.13:
தேசம் இணைய ஊடகத்தின் உலகளாவிய சாதனையாளர்கள் விருது விழா, இன்று டிசம்பர் 13-ஆம் நாள் மாலைத் தொடங்குகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டு ஊடக வட்டத்தில் சிறுத்தை யென அறியப்பட்டவரும் புலனாய்வு பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் நேற்று வெள்ளி அதிகாலையில் கோலாலம்பூர் வந்தடைந்தார்.
பத்திரிகை ஆளுமை, பத்திரிகை ஜாம்பவான் என்று போற்றப்படும் தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தேசம் உலகளாவிய சாதனையாளர்கள் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக மலேசியா வரவுள்ளதாக தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் கூறினார்.
தேசம் உலகளாவிய சாதனையாளர்கள் விருது விழா டிசம்பர் 13ஆம் தேதி Bandar Saujana Putra, Mahsa University Ballroom மாநாட்டு மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.


