Sunday, May 3, 2026

டத்தோ மு.அசோகன். நீடு வாழ்க!

மலேசியத் தமிழர்களின்-இந்திய சமுதாயத்தின் அரசியல் கேடயமான மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா தலைவர்களில் ஒருவரன டத்தோ மு.அசோகன், இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடிவரும் வேளையில் அவர் நீடு வாழ்ந்து, தன் அரசியல் பயணத்தில் இன்னும் பெரும்புகழையும் நற்பேற்றையும் எட்டும்படி குமரி நல்லாள் வாழ்த்துகிறாள்.

மஇகா என்னும் அரசியல் பேரியக்கத்தை நாட்டின் தென்புலத்து ஜோகூர் மாநிலத்தில் வழிநடத்தியவரும் அம்மாநில சட்டமன்றத்திற்கு கம்பிர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவருமான டத்தோ அசோகன், மஇகா-வின் உதவித் தலைவராக நீண்டகாலம் செயல்படுபவர்.

கடந்த 2024 கட்சித் தேர்தலில்கூட, மூன்று உதவித் தலைவர்களில் அதிக வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற முதல் நிலைத் தலைவரான இவர், கட்சியின் தேசியத் தலைமைக்கும் பொதுவாக கட்சியின் அனைத்துத் தலைவர்கள்-உறுப்பினர்களுக்கும் பிடித்தமானவர்; எந்நேரமும் முகத்தில் தேங்கிய புன்னகையுடன் வலம்வருபவர்.

அத்தகையத் தலைவரான டத்தோ அசோகன் முனியாண்டி, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று குமரி வான்முற்றத்தின் சார்பில் மீண்டும் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை