Thursday, April 23, 2026

காந்தியைக் கொன்ற சனாதனக் கொள்கை!நன்னெறிக் கல்விக்குப் பாடமா?அவமானம்! பேரவமானம்!!

சான்றோர் சபையான நாடாளுமன்ற மேலவைக்கும் இழுக்கு:
-லிங்கேசுவரன் பதவி விலக வேண்டும்!
-மலேசிய கூட்டு சமுதாயத்தில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்!!

அண்ணல் காந்தி அடிகளின் உயிரைக் குடித்தது சனாதனம்;
தமிழரைத் தாழ்த்துவதற்காக புனையப்பட்ட மகாபாரத கதையில்
‘சாதியில் தாழ்ந்தவன்’ என்று ஏகலைவனை ஒதுக்கியது சனாதனம்;
சுயம்பு வில்லாளரான அவரின் கட்டைவிரலை ‘குருதட்சனை’ என்ற பெயரில் காவுகொண்டு அவரை வேட்டையாட முடியாமல் செய்தது சனாதனம்;

அதைப்போல இன்னொரு புனை காவியமான இராமாயணத்தில்ஏழிசை வேந்தர்’, ‘முழு சைவர்’ இராவணரை அரக்கன் என்று இழித்தது சனாதனம்;
தமிழச்சி சூர்ப்பனகையை அவலட்சனமானவள் என்று பழித்தது சனாதனம்;

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100?

அதே இராமாயண புனை காவியத்தில்
தமிழர் யாவரையும் குரங்கு எனவும் எதிரியை அரக்கன் என்றும் வகைப்படுத்தியது சனாதனம்;
சிவநெறியர் நந்தனை தீயில் தள்ளி வஞ்சகம் புரிந்துவிட்டு, சோதியில் கலந்துவிட்டதாக கதை கட்டியது சனாதனம்;
நந்தன் நுழைந்ததால் சிதம்பர தலத்தின் தெற்கு வாசல் தீட்டுப்பட்டு விட்டதாக அதை இன்றளவும் பூட்டி வைத்திருப்பது சனாதனம்;
சிதம்பரத்து சிற்றம்பல மேடையில் தமிழ்ச் சைவர் திருமுறை ஓத தடைவிதித்து வருவது சனாதனம்;

அம்பேத்கர் குளித்த பொதுக்குளம் தீட்டுப்பட்டதாக 108 குடத்தில் கங்கையில் இருந்து கொண்டுவந்த புனிதநீரைக் கொண்டு குளத்திற்கே தீட்டுக் கழித்த கேவலமான கொள்கை சனாதனம்;
வள்ளலார் காற்றில் கலந்ததாக சுழ்ச்சி புரிந்தது சனாதனம்;

சூத்திரர்கள் கற்கக் கூடாதென்று குருகுலக் கல்விக்கு தடைவிதித்தது சனாதனம்;
மீறி கற்றால் கற்பவன் நாக்கை அறுக்க வேண்டும் என்றது சனாதனம்;
பிராமணன் கற்பதை கேட்டாலும் கேட்கும் சூத்திரன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற சொன்னது சனாதனம்;

பிரம்மனின் முகத்தில் பிறந்தவன் பார்ப்பனன் என்றும் மற்றவர்கள் தோள், தொடை, பாதத்தில் பிறந்தவர்கள் என்று பொய்யுரைத்தது சனாதனம்;
பிராமணர்களின் வசதிக்காக தேவதாசி முறையை உருவாக்கியது சனாதனம்;
உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உண்டாக்கியது சனாதனம்;
பாலர்பருவ திருமணத்தை நடைமுறைப்படுத்தியது சனாதனம்;

ஒரு சூத்திரன் கொலை புரிந்தால் அவன் தலையை வெட்ட வேண்டும் என்றும் அதேக் கொலையை ஒரு பிராமணன் புரிந்ததிருந்தால், அவன் முன் தலையில் மட்டும் கொஞ்சம் மயிரை மழித்துவிட்டு விட்டுவிட வேண்டும் என்று சாதிக்கொரு நீதி சொன்னது சனாதனம்;

அனல் வாதம்-புனல் வாதம் என்ற பெயரில் தமிழ் ஓலைச் சுவடிகளை எரித்தும் நீரில் விட்டும் தமிழ்த் துரோகம் புரிந்தது சனாதனம்;

இறைவனின் சன்னிதானத்திலேயே திருமுறை பதிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கியது சனாதனம்;
பெண்ணிற்கு கல்வியையும் சொத்துரிமையையும் மறுத்தது சனாதனம்;

இவை யாவும் பழையன;

21-ஆம் நூற்றாண்டில் புதியது இதோ!

பட்டியலின மக்கள்(பள்ளர், பறையர்) 6,600 ரூபாய் ஊதியம் பெற்றால் அவர்கள் பணக்காரர்கள் என்றும் பிரமாணர்கள் 2இலட்ச ரூபாய் ஊதியம் பெற்றாலும் அவர்கள் உயர்தட்டு ஏழையென வகைப்படுத்தி அவர்களுக்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது சனாதனம்;

சுதந்திர இந்தியாவில் நேரு உருவாக்கிய முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஒரு தமிழர்; சண்முகம் செட்டியார்.

ஆனால், சனாதன(ஆர்.எஸ்.எஸ்.) பயிற்சி பெற்ற பிராமண அடிமைகள் ஆளும் இன்றைய இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஒரேயொரு தமிழர்கூட கேபினெட் அமைச்சராக இல்லாததற்கு சனாதனக் கொள்கையே முழு காரணம்.

உலக இலக்கிய மேடையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்திக் கொடுத்த அறிவுப் பெட்டகம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வெட்கமின்றி சொந்தம் கொண்டாடப் பார்க்கிறது சனாதனம்;

இந்த ஆரிய சனாதனம் எக்காலத்திலும் இப்படித்தான்; முரசொலி மாறனின் மனைவி மல்லிகா ஒரு பிராமணப் பெண்; ரஜினி காந்தின் மனைவி லதாவும் ஒரு பார்ப்பணச்சி; சேர்த்து வைத்தது, லதாவின் தங்கையின் கணவன் ஒய்.ஜி.மகேந்திரன்;
எவர் அறிவாளியாக, பணக்காரராக, புகழ் பெற்றவராக இருந்தாலும் அவர்களை தம்குல பெண்களை ஏவிவிட்டு வசப்படுத்தும் பார்ப்பனியத்திற்கு துணைபோவது வெட்கங்கெட்ட சனாதனம்.

இஙஙனம் சொல்லி மாளாது; எழுதியும் தீராது; சனாதனம் என்ற பெயரில் தமிழருக்கும் தமிழுக்கும் எதிராக பிராமணர்கள் புரிந்த-புரியும் அட்டூழியம்.., அநியாயம்..,

மண்ணின் மைந்தர்களான திராவிடர்களுக்கும் வந்தேறி பார்ப்பணர்களுக்கும் பல்லாயிர ஆண்டுகளாக நிகழும் ஆன்மிக-அரசியல்-பண்பாட்டுப் போரில், தமிழ்ப் பகை முடிக்கவும் ஆரியர்களின் ஆதிக்கத்திற்கு வழிகோலவும் துணைபுரியும் சனாதன அதர்மம், மலேசிய கல்வித்துறையின் நன்னெறிக் கல்விக்கு பாடத்திட்டமா?

தமிழ் விரோத எண்ணம் கொண்டு, ஆரிய அடிமையாக உருமாறிவிட்ட லிங்கேசுவரனே விளக்கம் சொல்!

மேலேக் குறிப்பிட்டவற்றில் ஒன்றையாவது லிங்கேசுவரனால் மறுக்க முடியுமா?

ஆரிய-பிராமண நலம்பாடும் இத்தகைய கீழான சனாதனம், மாணவர்களுக்கு நன்னெறியைப் போதிக்கும் என்று மண்டையில் மண்ணாங்கட்டியைக் கொண்டவன்கூட சொல்லத் துணியமாட்டான்.

ஆரிய மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் சனாதன அதர்மத்திற்கும் மலேசியத் தமிழ்- இந்திய மாணவர்களின் நன்னெறிக் கல்விக்கும் எள் முனையளவும் தொடர்பில்லை என்ற உண்மையை உணராத லிங்கேசுவரன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பு வகிப்பதற்கு அறவே தகுதி இல்லாதவர்.

யார் யார் எந்தெந்தத் தொழிலை புரிவதற்கு தகுதியானவர்கள் என்பதை முன்பே கண்டறிந்து அவர் அவரையும் படைத்ததாக கிருஷ்ண பரமாத்மா கூறியதாக பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது; அப்படி என்றால் லிங்கேஸ்வரனின் தகுதியும் பணியும் அப்படித்தான் நிர்ணயிக்கப்பட்டதா என்பதற்கு லிங்கேஸ்வரனின் விளக்கம் சொல்வாரா?

உலக அரசியலின் அகிம்சை சின்னமாக ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு வரையறை செய்துள்ள அண்ணல் காந்தி அடிகளை, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பொத்திப்பொத்தி பாதுகாத்தனர். ஆனால், அவர்கள் வெளியேறிய அடுத்த ஆறு மாதங்களில் சுதந்திர இந்தியாவில், தேசத்தந்தை என்று போற்றப்பட்ட மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அவரைப் பலிகொண்ட கொள்கை சனாதன அதர்மம் என்ற உண்மை லிங்கேசுவரனுக்குத் தெரியாமல் போனதுகூட ஏற்றுக்கொள்ளக் கூடியது; ஆனால், அத்தகைய நாசகாரக் கொள்கையை மலேசிய நாடாளுமன்றத்தில் அதுவும் அறிவார்ந்தோர் இடம்பெறும் மேலவையில் ஆதரித்திருப்பது மிகக் கேவலமானது; இழிவிலும் இழிவானது.

மாந்த இனத்தில் வேற்றுமையைப் புகுத்தி, தாங்கள் மட்டும் உயர்ந்தவர் என்று ஆரிய பார்ப்பனர்கள், தங்களுக்குத் தாங்களே வெண்சாமரம் வீசிக் கொள்ளவும் மற்றவர்களைத் தாழ்த்தவும் புனையப்பட்ட அக்கிரமக் கொள்கையான சனாதனம், மாணவர்களுக்கு எங்ஙனம் நன்னெறியைப் போதிக்கும்?.

அவரை, மலேசிய அரசாங்கம் விசாரிக்க வேண்டும். ஜனநாயக செயல் கட்சிக்கு வரலாற்று உண்மை தெரிந்திருக்குமேயானால், இந்த உண்மையை உணர்ந்து லிங்கேசுவரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்; இல்லாவிட்டால், மனித குலத்தில் பேதமையை ஏற்படுத்தி, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்று மனிதர்களைப் பிரிப்பதுடன் சாதிக்கொரு நீதி சொல்லும் பச்சைப் போக்கிரித்தன சனாதன அதர்மத்தை ஜசெக-வும் ஆதரிப்பதாக பொருள்படும்.

மராத்திய சித்பவன பிராமணன்-சனாதனி-இந்து தீவிரவாதி- நாதுராம விநாயக கோட்சேவால்
காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

தொடரும்.. .

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை