Wednesday, April 22, 2026

சொஸ்மா சட்டம் தேவையில்லை!நடப்பு சட்டமே போதுமானது -பேராசிரியர் இராமசாமி

நாட்டில் ‘சொஸ்மா’ சட்டம் தேவையில்லை. தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க நடப்பில் உள்ள கிரிமினல் சட்டமே போதுமானது என்று ‘உரிமை’க் கட்சியின் தலைவர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்தார்.

முன்பு சொஸ்மா சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் இப்போது அதை ஆதாரிக்கிறார்கள்.

ஒருவர் தவறு செய்திருந்தால் அவர்மீது கிரிமினல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் சொஸ்மா சட்டத்தை பயன் படுத்தி அவர்கள் தடுத்து வைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். இவர்கள் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

ஆகவே இந்த சொஸ்மா சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நேற்று சீன அசெம்பிளி மண்டபத்தில் உரிமை கட்சி சிலாங்கூர் மாநிலக் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பாகான் டாலம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல், சுதன் மற்றும் வழக்கறிஞர் முன் வைத்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை