Monday, April 20, 2026

ஆர்.டி.எம். தமிழ்ச் செய்திப் பிரிவில்பெரியார் புறக்கணிப்பு -மாதிக தலைவர் நாக பஞ்சு ஆதங்கம்

ஐநா மன்றத்தின் கல்வி-அறிவியல்-கலாச்சாரப் பிரிவான ‘யுனெஸ்கோ’ அமைப்பினால் ‘தென்னாசியாவின் சாக்ரட்டீஸ், சமூகப் புரட்சியாளர், பெண்ணுரிமைப் போராளி’ என்றெல்லாம் பாராட்டப்பட்ட பகுத்தறிவுச் சூரியன் தமிழினக் காவலர் தந்தை பெரியாருக்கு இன்று டிசம்பர் 24-ஆம் நாள், 52-ஆவது நினைவு நாள்.

இதேநாள், தமிழ் நாட்டின் மேநாள் முதல்வரும் புரட்சி நடிகருமான எம்ஜிஆருக்கும் 38-ஆவது நினைவு நாள்.

இன்று ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவில், வழக்கம்போல சான்றோரை நினைவுகூரும் அங்கம் இடம்பெற்றது. காலை 9:00 மணி செய்தி அறிக்கைக்குமுன், எம்ஜிஆரைப் புகழ்ந்த ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினர், பெரியாரை அடியோடு புறக்கணித்துவிட்டனர் என்று மலேசிய மாந்தநேய திராவிடர்க் கழகத் தலைவர் நாக.பஞ்சு ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

காரணம் குறித்து விசாரித்தபொழுது, கடந்த 2024இல் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர்த் திங்கள் 17-ஆம் நாளில், தந்தை பெரியாரைப் பற்றி இதே மின்னல் பண்ப்லை வானொலி மூலம் ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினர் ஒலிபரப்பிய செய்திக்கு, ஆகம அனித் தலைவர் அருண் துரைசாமி மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.

அந்தக் கண்டனக் குறிப்பில், பெரியார் சொந்த வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கக்கேடான செயலை செய்தவர் என்றும் மலேசியாவின் ருக்குன் நெகாரா கோட்பாட்டில் ஒன்றான இறைவன்மீது நம்பிக்கை என்னும் கொள்கைக்கு எதிரான இறைமறுப்பாளர் என்றும் அருண் துரைசாமி தெரிவித்திருக்கிறார்ர்.

மணியம்மையை பெரியாரின் வளர்ப்பு மகள் என்பது முழு மூடத்தனம்.

அவர் கல்லூரிக் காலத்திலிருந்தே சுயமரியாதை-பகுத்தறிவு சிந்தனையால் உந்தப்பட்டு, பெரியார் நடத்திய தமிழ்-ஆங்கில பத்திரிகைப் பணிக்கு உதவியர். ஒரு தொண்டராக வாழ்ந்தவர். அவரை வள்ர்ப்பு மகள் என்று இந்து திவிரவாதிகளும் இந்தி ஆதரவாளர்களும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

மணவாழ்வைத் துறைந்த திராவிட சிந்தாந்தத்திற்கான தன் வாழ்வை அர்ப்பணித்த மணியம்மை, பெரியாருக்கு வளர்ப்பு மகள் என்பது சுத்தமான போக்கிரித்தனம். அவர் வளர்ப்பு மகள் என்பதற்கு எந்த ஆவணத்தையாவது அருண் துரைசாமியால் நிரூபிக்க முடியுமா?

அப்படி மணியம்மையை பெண்டாள வேண்டும் என்று பெரியார் நினைத்திருந்தால், முதல் மனைவி நாகம்மையார் இறந்த 1933-ஆம் ஆண்டிலேயே அவர் செய்திருப்பார்.

15 ஆண்டுகள் கழித்து, 1948-இல் மணியம்மையை பெரியார் திருமணம் புரிந்தது ராஜாஜியின் ஆலோசனையின்படி என்ற உண்மை அருண் துரைசாமி போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்து கொள்ளும் தேடலும் அந்தக் கூட்டத்தாரிடம் இல்லை.

Made with LogoLicious Add Your Logo App

அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையாருக்கு வயது 40. உடல் சுகத்திற்காக இந்தத் திருமணம் நடைபெற்றிருந்தால், அது 15 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டும்

உண்மையாக நடைபெற்றது என்னவென்றால், அறிஞர் அண்ணா தலைமையில் ஈ.வெ.கி. சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் போன்றவர்கள் அரசியல் இயக்கம் காண்பதற்காக பெரியாருடன் முரண்பட்ட தருணம் அது.

திராவிடர்க் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணிக்கு அப்போது 15 வயது மட்டுமே; இதனால், திராவிடர் கழகத்தின் சொத்தை த்னக்குப் பின்னால் பாதுகாக்க , மணியம்மையை சுவீகாரமாக்க அல்லது வாரிசாக தத்தெடுக்க முடியுமா என்று ராஜாஜியிடம் ஆலோசனைக் கேட்ட பெரியாரிடம்,

அதற்கு சட்டத்தில் இடமில்லை; வேண்டுமானால் மணம் புரிந்து கொள்ளலாம் என்றார். அதற்குப் பின்னர்தான் தந்தை பெரியார், மணியம்மையின் சம்மதம் பெற்று வெறுமனே சட்டமுறைப்படி திருமணம் புரிந்து கொண்டார்.

இதற்கு முன்பே, பெரியாரின் சிறுநீர்ப் பை அகற்றப்பட்டு, உடலுக்கு வெளியே பொருத்தப்பட்ட மூத்திரப் பை உதவியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு பணிவிடை செய்துவந்தவர் மணியம்மையார்தான்.

இவ்வாறு, சிறுநீர்ப்பை(Bladder) அகற்றப்பட்டு அல்லல்பட்டு வாழ்ந்த 70 வயது முதியவரை-நோயாளியை, வளர்ப்பு மகளை திருமணம் புரிந்த ஒழுக்ககேடானவர் பெரியார் என்று சொல்லும் அருண் துரைசாமியிடம் உண்மையும் அறிவும் தெளிவும் துளியளவும் இல்லை. இருப்பதெல்லாம் மத வெறியும் திராவிட துவேசமும்.

ஒரு வாதத்திற்கு பெரியார் செய்தது ஒழுக்கக்கேடானது என்றால், தமிழருக்கு இன்று கல்விக் கடவுளாகப் போற்றப்படும் பெண் தெய்வமான சரசுவதியின் பிறப்பைப்பற்றி, அருண் துரைசாமி செய்தியாளர்க் கூட்டத்தைக் கூட்டி தெரிவிக்க முடியுமா?

ஓழுக்கக்கேட்டிலும் கள்ள சரசத்திலும் பிறந்தவள்தான் சரசுவதி என்றும் இந்த ஒழுக்ககேடான கலவிப் பிறவி மாணவர்களுக்கு எப்படி கல்வி தெய்வமாக இருக்க முடியும் என்று போலீஸ் புகார் செய்ய அருண்துரைசாமிக்கு துணிவிருக்கிறதா?

அருண் துரைசாமிக்கு நான் சவால் விடுகிறேன். பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது ஒழுக்கக்கேடு என்றால், கல்விக் கடவுளாகப் போற்றப்படும் சரசுவதியின் ஒழுக்கத்தைப் பற்றியும் போலீஸ் புகார் செய்ய அருண் துரைசாமி முன்வர வேண்டும்.

ராதை தன் கணவன் கண்ணனிடம், ஏன் கண்ணா? உனக்காக மனைவி என்று ஒருத்தி வீட்டில் இருக்கும்பொழுது, நீ ஒவ்வொரு குடிலாகச் சென்று அனைத்துக் கோபியரிடமும் கும்மாளம் அடித்துவிட்டு வருகிறாயே, இது நியாயாமா என்று கேட்டபொழுது,

“சரி, சரி, இனி அடக்கமாக இருக்கிறேன். இதோ பார், இந்த மாயக் கண்ணாடியை வைத்துக் கொள். நான் எங்கெங்கு செல்கிறேன்; என்னென்ன செய்கிறேன் என்பதை யெல்லாம் நீ இந்தக் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருக்கலாம்” என்று சொன்ன கண்ணன்,

“ஆணாலும் தற்பொழுது நான் பாரதப் போர் முனைக்குச் செல்கிறேன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக செயல்படப் போகிறேன். இந்தக் கண்ணாடி மூலம் நீ என்னை கண்காணிக்கலாம்” என்றும் சொல்லிவிட்டு கண்ணன் விடைபெற்றுக் கொண்டார்.

போர் முனைக்குச் சென்றாலும் பெண்களின்மீது சபலம் கொண்ட தன் கணவன் கண்ணன்மீது சந்தேகம் கொண்ட ராதை, கண்ணன் வழங்கிய மாயக் கண்ணாடி மூலம் அவனைக் கண்காணித்தபடியே இருக்கிறாள்.

கண்ணனை தொடர்ந்து கவனித்த ராதை, தேரில் கண்ணன் அருகில் இருக்கும் அர்ச்சுனனையும் கவனிக்கிறாள். அர்ச்சுனனின் அகண்ட தோள், வில்லேந்திய வலியமையான கரங்கள், போர் பராக்கிரமம் ஆகியற்றைக் கண்டு அவன்மீது மையல் கொள்கிறாள்.

அதாவது, தன் கண்ணாளன் கண்ணனின் அருகில் இருக்கும் அர்ச்சுனன்மீது கள்ளக்காதல் கொள்கிறாள் ராதை. அந்த நேரத்தில், அர்ச்சுனன், எதிரே இருக்கும் கர்ணன் தரப்பினர்மீது அம்பைப் பாய்ச்சுவதற்காக கை வேகமாக நீட்டியபொழுது, அந்தக் கை, மாயக் கண்ணாடிவழியே தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்த ராதையில் கன்னத்தைத் தீண்டியதால், அந்த வினாடியே ராதையின் கன்னத்தில் இருந்து குபீரென பிறந்தவள்தான் சரசுவதி என்று புராணக் கதை கூறுகிறது.

அப்படியென்றால் சரசுவதிக்கு அப்பா யார் என்பதையும் ஒழுக்கக்கேடான முறையில் கள்ளசரசத்தில் பிறந்த சரஸ்வதி, கலவி முறைக்கு வேண்டுமானால் தெய்வமாக இருக்கலாமேயொழிய கல்விக் கடவுளாக இருக்க முடியுமா என்றும் கேட்டு அருண் துரைசாமி போலீசில் புகார் செய்ய துணிவும் வக்கும் இருக்கிறதா என்றும் நாக.பஞ்சு சவால் விட்டுள்ளார்.

கம்ப இராமாயணத்தை இயற்றிய கம்பர் சரசுவதியை வணங்கியதில்லை; மக்கள் பெருங்காப்பியம் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சரசுவதியை வணங்கியதில்லை; அட்சயப் பாத்திரத்தின் மூலம் ஆயிரக் கணக்கானோரின் பசிப் பிணியைப் போக்கிய மணிமேகலை சரசுவதியை வணங்கியதில்லை; திருவிளையாடற் புராணம் இயற்றிய நக்கீரன் சரசுவதியை வணங்கியதில்லை; சைவ சமயத்திற்காக பல்லாயிரக் கணக்கான பாடல்களை இயற்றி திருமுறையை உருவாக்கிய நாயன்மார் சரசுவதியை வணங்கியதில்லை;

வீரத் துறவி-பெரும்பாவலர் அருட்பிரகாச வள்ளலார் அடிகள் சரசுவதியை வணங்கியதில்லை; இவர்கள் அனைவரும் வணங்கியது பார்வதி தேவியைத்தான்.

மாகவி பாரதியார்கூட சக்தி தேவியைத்தான் வணங்கினாரே ஒழிய சரசுவதியை வணங்கியதில்லை; அப்படி யென்றால், கள்ள கலவியில் பிறந்த சரசுவதி, தமிழர்ருக்கு எப்போது கல்விக் கடவுளானாள் என்று கேட்டு போலீஸ் புகார் அளிக்க அருண் துரைசாமி முன்வருவாரா?

பெரியார் மணியம்மையைத் திருமணம் புரிந்தது ஒழுக்கக்கேடு என்றால், இராமனின் அப்பா, தசரதன் 60 ஆயிரம் பெண்களைத் திருமணம் புரிந்தது ஒழுக்கசீலத்தனமா?

இதேக் கண்ணன், நாரதரை பெண்ணாக உருமாற்றி, ஆணும் ஆணுமாக சேர்ந்து ஓரின சேர்க்கை வாழ்க்கை நடத்தி, 60 பிள்ளைகளை அறுபது ஆண்டுகளில் பெற்றதும் இந்த முடைநாற்ற கலவி அத்தியாயத்தின் 39-ஆவது பிள்ளையின் பெயரான் ‘விசுவாவசு’-தான் இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டின் பெயராக சூட்டப்பட்டிருக்கிறது.

இது ஆபாசமான கதை மட்டுமல்ல; ஒழுக்க சீர்கேட்டின் உச்சம் என்று அருண் துரைசாமி போலிசில் புகார்செய்ய முன்வருவாரா?

பெரியார் இறை மறுப்பாளர் என்றும் ருக்குன் நெகாரா கோட்பாட்டுக்கு எதிரானவர் என்றும் பம்மாத்து காட்டி ஏமாற்று வேலைபுரியும் அருண் துரைசாமி,

பெரியார், சாதி-மத-பேதமற்ற சமுதாயத்தைக் காண விரும்பியபோது, சாதிக்கு வேதம் துணைபோகிறது; வேதத்திற்கு மதம் பாதுகாப்பளிக்கிறது; மதம் கடவுளின் பெயரால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதால், தந்தை பெரியார் ஒரேயொரு முறை கடவுள் இல்லை யென்றார்.

நான்மறையில் ஒன்றான ரிக் வேதத்தின் 153-ஆவது பாடலில் பிரம்மாவ்வின் முகத்தில் பிராமனர் பிறந்ததாக கதைக் கட்டப்பட்டுள்ள்தே, அதை எதிர்த்து அருண் துரைசாமி புகார் செய்வாரா?

இறைவனின் முகத்தில் ஒரு சாதியார் பிறந்தால் அந்த உறுப்பிற்கு பெயர் என்னவென்று அருண் துரைசாமி விளக்குவாரா?

தமிழ் எழுத்தைச் சிர்திருத்தியவர் தந்தை பெரியார்தான்; அந்த எழுத்தைத்தான் அருண் துரைசாமி பயன்படுத்துகிறார். கல்வி வளர்ச்சிக்கும் இதழியல் மேம்பாட்டிற்கு அயராது பாடுபட்டிருக்கிறார்ர்.

ஆசியாவில், பெண்களுக்காக முதன் முதலில் பொறியியல் பல்கலைக்கழகத்தை நிறுவியர் தந்தை பெரியார், இந்துக்களுக்கான கல்வி-வேலை வாய்ப்பு உரிமைக்காக் இந்திய அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர் அவர்;

விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு, காந்தியின் உத்தரவிற்கு ஏற்ப கதராடையை தோளில் சுமந்து வீதிவீதியாக விற்று ஆங்கில ஆட்சியாளர்களை எதிர்த்தவர், கோயில் கட்டிய தமிழனே அங்கு அர்ச்சகராக இருக்க வேண்டும்; பெண்களுக்கு கல்வியை வலியுறுத்தியவர் என்றெல்லாம் அரசியல்-சமுதாய வெளியில் செய்த ஆயிரம் புரட்சி குறித்து அருண் துரைசாமிக்குத் தெரியவில்லை.

அதெல்லாம் இருக்கட்டும்; ஆலயங்களில் சிலைகளைத் திருடுவதும், உண்டியல் கணக்கை மறைப்பதும், சாமி நகையைத் திருடி அடகு வைப்பது போன்ற ஆன்மிக போக்கிரித்தனங்களைச் செய்வதெல்லாம் இந்துக்கள்தான் என்பது அருண் துரைசாமிக்கு எட்டாதோ?

இப்பொழுது 150-க்கும் மேற்பட்ட ஆலயங்களை அரசு நிருவாகம் நேரடிக் கட்டிப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளதே அதைப்பற்றி போலீஸ் புகார் செய்ய அருண் துரைசாமி முன்வருவாரா?

பெரியாரின் கருந்துகளை கருத்து ரீதியாக எதிர்கொள். துப்பில்லை என்றால் அருண் துரைசாமியே அமைதியாக ஒதுங்கி நில்.

குதர்க்காமாகப் பேசினால், வைணவத்தின் ஆபாசக் கதை அத்தனையும் ஒவொவ்ன்றாக இன்றைய இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லப்படும்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை