
கோடம்பாக்கத்தின் நாயக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின்(தவெக) தலைவருமான விஜய்யையும் அவரின் அணியினரையும் தற்குறிக் கூட்டம் என்று தமிழக அரசியல் வட்டத்தில் முத்திரைக் குத்தப்பட்டுள்ளது.
அந்த முத்திரையை கோலாலம்பூரிலும் புதுப்பித்துள்ளார் விஜய்.
விஜய், தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் என்னும் வேட்கையில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கி வழிநடத்தி வருகிறார். இதனால், நடிப்புத் தொழிலை கைவிட இருப்பதாகவும் தான் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’-ஐ, வரும் ஜனவரி 9-ஆம் நாள் வெளியிட இருப்பதாகவும் அறிவித்த விஜய், அதன் தொடர்பில் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் அறிமுக விழாவை கடந்த சனிக்கிழமை டிசம்பர் 27-ஆம் நாள் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடத்தினார் விஜய்.

அந்த விழாவில், மலேசிய இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த Dr அவர் அலட்சியப்படுத்தி இருப்பது, விஜய் ஓர் அரசியல் தலைவராக உருவாகிறார் என்பதற்கு மாறாக, ஒரு தற்குறியாகவே இருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்து எல்லையிலேயே இன்னமும் இருக்கிறார் என்றும் விமர்சனப் பார்வை எழுந்துள்ளது.
பொதுவாக, தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு வருகை தருகின்ற அரசியல், சமூக, ஆன்மீகத் தலைவர்கள் மட்டுமல்ல; திரை நட்சத்திரங்களும்கூட, மலேசிய அரசியல் தலைவர்களை சந்தித்து பரஸ்பர அன்பை பரிமாறி, மரியாதை நிமித்தம் உறவாடுவது வழக்கம்.

அப்படி வருகிறவர்கள், சில வேளைகளில் மலேசியத் தலைவர்களின் முன்னிலையிலோ தலைமையிலோ தங்கள் நிகழ்ச்சியைப் படைப்பதும்கூட தொன்றுதொட்டு நடைபெறுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கும் விஜய், மலேசியாவில் உள்ளத் தலைவர்களை அடியோடு அவமதித்திருப்பது, அவரின் தற்குறித் தனத்தை வெளிப்படுத்துகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் ‘பத்மஸ்ரீ’ கமலஹாசன், கார் பந்தய வீரர் அஜித் உள்ளிட்ட நாயக நடிகர்கள், இசைப்புயல் ரகுமான் போன்ற இசைத் துறையினர் என்றெல்லாம் பலரும் மலேசியாவிற்கு வருகை தரும் பொழுது, பிரதமர் அன்வார் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள், மஇகா தலைவர்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூகத் தலைவர்களை சந்தித்த தெல்லாம் வரலாறு.
இப்படிப்பட்ட அரசியல் நாகரிகமும் பண்பாடும் இல்லாமல், பத்திரிகையாளர்களையும் சந்திக்காமல், கதை ஆசிரியர் எழுதிக் கொடுக்கும் வசனத்தை திரைப்படத்தில் பேசி நடிப்பதைப் போல இப்பொழுதும் பிறர் எழுதிக் கொடுப்பதையே அரசியல் மேடையில் பேசி வருகிறார் விஜய்.

தமிழ் நாட்டில் அவ்வாறு செயல்படும் தற்குறித்தனத்தை மலேசியாவிலும் விஜய் மெய்ப்பித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
மலேசியாவை தற்பொழுது ஆளும் ஒற்றுமை அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி இருவர், ஜனநாயகன் பாடல் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரும்பி இருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஈடுபாடும் நடிகர் விஜயிடமும் இல்லை; அவர் தரப்பிடமும் இல்லை;

ஒருவேளை, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும், இந்தத் தற்குறியை எதற்கு சந்திக்க வேண்டும் என்றெண்ணி, ஏற்பாட்டாளர் மாலிக்கிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனரா என்பதும் தெரியவில்லை.
2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக வி.கே. சசிகலா பொறுப்பேற்க இருக்கிறார் என்பதை அறிந்து, மலேசியத் தமிழ்த் தலைவர்கள் போயஸ் தோட்டத்திற்குச் சென்று அவரை வாழ்த்தி வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத் தமிழர்களுக்கும் இந்த மலையகத் தமிழர்களுக்கும் இடையே நிலவும் தொப்புள் கொடி உறவின் அடிப்படையில் ஆன்மிகப் பாலமாக விளங்கும் பத்துமலைத் திருத்தலத்திற்கு அனைவரும் வந்து செல்வது வழக்கம்.
தமிழக எல்லையைக் கடந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள்கூட பத்துமலை அருள்மிகு திருமுருக தலத்திற்கு வந்துள்ளனர். இதையும் விஜய் அலட்சியம் செய்திருப்பது, அவர் ஒரு தற்குறி என்பதைக் காட்டுவதாக குமரியிடம் பலரும் கருத்தாடி வருகின்றனர்.

இதே ஜனநாயகன் படப்படிப்பு தொடர்பில், கடந்த செப்டம்பர் மாத பிற்பகுதியில் கட்சிக்கூட்டம் என்ற பெயரில் தமிழ் நாடு, கரூரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் திருட்டுத்தனமாக 60-க்கும் மேற்பட்ட திருகூர்திகள் மூலம் படப்படிப்பு நடத்தி, 41 பேரின் மரணத்திற்கு காரணமான நடிகர் விஜய், அதன் பிறகு எங்கும் தலிகாட்டாமல் ஒரு மாதம் வரை ஒளிந்திருந்ததார்.
அந்த வகையில் விஜய், ஜனநாயகனா அல்லது பிணநாயகனா என்று இன்றளவும் விமர்சிக்கப்படுகிறார்.
மலேசியாவில் 22 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்ற நிலையில், 60-70 ஆயிரம் பேர், அதுவும் விடுமுறைக் காலத்தில் திரள்வது ஆவலில் அதிகமானோர் ஒன்றுகூடியது ஒன்றும் வியப்பல்ல; அதுவும் ஒரு நட்சத்திர நடிகரை நேரில் காணும் ஆவலில் திரண்ட இந்தக் கூட்டத்தில் தமிழ் நாட்டுத் தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.




